3 அமைச்சர்கள், 12 இராஜாங்க அமைச்சர்கள் புதியவர்கள்

0

சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசின் இன்றைய அமைச்சரவை நியமனத்தின் போது 25 அமைச்சர்கள் 39 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிக்கு முதன்முறையாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சபாரி ஆகியோரே இவ்வாறு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிக்கு முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இராஜாங்க அமைச்சர் பதவிக்கு 12 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜீவன் தொண்டமான், சிசிர ஜெயக்கொடி, பிரசன்ன ரணவீர, சீதா அரம்பேபொல, சன்னா ஜெயசுமன, நாலக்க கொதகேவ, டிவி சாணக்க, சசீந்திர ராஜபக்ச, எஸ்.வியாழேந்திரன், டிபி ஹேரத், அஜித் நிவாட் ஹப்ரால், தேனுக்க விதானகமகே ஆகிய 12 பேரே இராஜாங்க அமைச்சர் பதவிக்கு முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளனர்.