இந்திய சுதந்திர தினம்; யாழ்ப்பாணத்திலும் விழா

0

இந்தியாவின் 74வது சுதந்திர தின விழா யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று நடைபெற்றது.

காலை 9.45 மணியளவில் துணை தூதுவர் சங்கர் பாலச்சந்தர் இந்திய தேசிய கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து, பாரத ஜனாதிபதி கோவிந்நாத் சிங் இந்திய மக்களுக்கு ஆற்றிய உரையை வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து, இசை நிகழ்வுகளும், மரநடுகைகளும் இடம்பெற்றன.