தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

0

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்றும் மீளவும் ஆயிரம் ரூபாயால் குறைவடைந்துள்ளது.

தங்கம் இறக்குமதி மீதான வரி 15 சதவீதம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேற்றுமுன்தினம் அறிவித்த நிலையில் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாயால் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இறக்குமதி மீதான வரி நீக்கத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலையை உடனடியாக குறைக்க முடியாது என தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

ஜூலை மாத ஆரம்பத்தில் தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயைத் தொட்டது.

இந்த நிலையில் இந்த மாதமல தங்கத்தின் விலை சரிவைக் கண்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று (செப்ரெம்பர் 9 ) புதன்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை  90 ஆயிரத்து 290 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 91 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று 98 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒன்று 99 ஆயிரம் 500 ரூபாயாகக் காணப்பட்டது.