வங்கிக் கடன் மதிப்பெண்களை வாடிக்கையாளர்கள் பெற வசதி

0

பொதுமக்களுக்கு தங்களது சொந்த வங்கிக் கடன் மதிப்பெண்களைப் பெறுவதற்கான (CRIB -Score) வசதியை இலங்கையின் கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) வழங்குகிறது.

இலங்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் வங்கிக் கடன் மதிப்பெண்கள் திட்டத்தை நிதி நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தியது.

உலகெங்கிலும் உள்ள நிதிச் சந்தைகளில் விரைவாகவும், சீராகவும் கடன் வாங்குபவர்களுடன் இணைக்கப்பட்டுள்ள கடன் தகுதி மற்றும் ஆபத்தை அறிய வங்கிக் கடன் மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கையின் கொடுகடன் தகவல் பணியகம், இலங்கையில் உள்ள நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கடன் தகவல்களை இலங்கை மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி கடன் மதிப் பெண்களாக வழங்குகின்றது.

மதிப்பெண் அறிக்கை வாடிக்கையாளருக்கு கடன் வழங்குவதால் ஏற்படும் ஆபத்து தரத்தையும், உருவாக்கப்பட்ட மதிப்பெண்களுக்கான முக்கிய காரணங்களையும் வழங்குகிறது.

பொதுமக்கள் இப்போது இலங்கையின் கொடுகடன் தகவல் பணியக (CRIB) அலுவலகத்தில் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி தங்கள் சொந்த வங்கிக் கடன் மதிப்பெண்களைப் பெறலாம் அல்லது தங்கள் வங்கிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் மற்றும் இணையத்தில் அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.