2018-2019இல் சேர்க்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்களை நிரந்தரமாக்கக் கோரி அமைச்சரிடம் நாளை மனுக் கையளிப்பு

0

2018-2019 ஆண்டுகளில் பொது சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கலை விரைவுபடுத்த தலையிடுமாறு கோரி அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனிடம் நாளை மனுக் கையளிக்கப்படவுள்ளது.

இணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிலையம் தெரிவித்துள்ளது.
மனுவை ஒப்படைத்த பின்னர், அமைச்சருக்கும் நிலையத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே நாளை காலை கலந்துரையாடல் நடைபெறும் என்று அதன் தலைவர் தமிகா முனசிங்க தெரிவித்தார்.

ஓகஸ்ட் 2018இல் பொது சேவைக்கு ஆள்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுநர்கள், 2019 இல் ஆள்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுநர்கள் 14 ஆயிரத்து 283 பேர் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டனர், ஆனால் இதுவரை அவர்கள் சேவையில் நிரந்தரமாக்கப்படவில்லை என்று இணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிலையம் குற்றம்சாட்டுகிறது.

நாளைய கலந்துரையாடலில் இந்த விவகாரம் குறித்து பேச்சு நடத்தப்படும் என்று கூட்டு இணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிலையத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.