ஐதேகவின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்த்தன தெரிவு

0

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இந்த தெரிவை வாக்கெடுப்பின் மூலம் மேற்கொண்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று கூடியது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.