கொள்ளை, திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கிளிநொச்சியில் கைது

0

கிளிநொச்சியில் பல்வேறு கொள்ளை – திருட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5 லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான தங்க நகைகள் உள்ளிட்ட கொள்ளையிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் மூவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொறியியலாளர் ஒருவரின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் சந்தேக நபர்களுக்கு தொடர்பு உள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் மூவரும் இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.