தியாக தீபன் திலீபனை நினைவு கூருவதற்கு தடை; மீளாய்வை நிராகரித்தது யாழ். நீதிமன்றம்

0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை நடத்த தடை விதித்த உத்தரவை மீளப்பெற முடியாது என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற வகையில் அதன் உறுப்பினரை நினைவு கூருவதற்கு நாட்டின் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு பிரதிவாதிகளால் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நிராகரிப்பதாக யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.