மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் யாழ்.குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு மாற்றம்

0

மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியான அவர், வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிச் சேவை ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளார்.

2 மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வை மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப்,மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் இணைந்து முன்னெடுப்பர்.

புங்குடுதீவு மாணவி வித்யா சிவலோகநாதன் படுகொலையை விசாரிக்கும் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட தீர்ப்பாயத்தின் தலைவராக மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் பங்கேற்றார். அதில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.