அமைச்சரவைக் கூட்டம் இனி ஒவ்வொரு திங்கள் மாலை நடைபெறும்

0

அமைச்சரவைக் கூட்டம் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் ‘பொதுமக்கள் தினம்” என்பதால் அன்றைய தினம் மாலை 5 மணிக்கே அமைச்சரவை ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன், திங்கட்கிழை தவிர்ந்த நாள்களில் நாடாளுமன்ற அமர்வுகள் முற்பகல் 10 மணிக்கும் ஆரம்பிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்படும். அதனால் புதன்கிழமை நடைபெற்று வந்த அமைச்சரவைக் கூட்டம் திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.