சிறுவர் வயது வரம்பு 14-18 வரை உயர்வு; வேலைக்கு அமர்த்தும் வயது 16ஆக அதிகரிப்பு – அமைச்சரவைத் தீர்மானம்

0

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் வயது எல்லையை 15 இலிருந்து 16ஆக உயர்த்தப்படுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அத்துடன், சிறுவர்கள் என்ற வயது வரம்பு 14 வயதிலிருந்து 18 வயதாக உயர்த்துவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இந்த தகவலை அமைச்சரவை இணைப்பேச்சாளர், அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சிறுவர்களின் விவகாரம் தொடர்பில் ஒரு நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. வேலைக்குச் செல்ல பொருந்தக்கூடிய வயது 15 முதல் 16 வயது வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது கல்வியின் முக்கியத்துவத்தை க.பொ.த சாதாரணதரப் பரீட்சை எழுதும் வரை முன்னுரிமையாக வைத்து மேலும் வாய்ப்புகளை வளர்த்துக் கொள்ள உதவும்

அத்துடன், சிறுவர் என்ற வயது வரம்பு 14 வயது முதல் 18 வயது வரை உயர்த்தப்பட்டுள்ளது.

18 வயது வரை, அவர்கள் சிறுவர்களாக கருதப்படுவார்கள். இது சிறுவர் சந்தேக நபர்களை நீதிமன்ற விளக்கு எடுபபதைத் தடுக்கும் – என்றார்.