வாகன இறக்குமதிக்கு இடைக்காலத் தடை

0

வாகன இறக்குமதிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யக்கூடிய அத்தியாவசியமற்ற பொருள்களின் இறக்குமதியும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.