2021 க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை நிறைவு செய்ய இயலாமை குறித்து கல்வி அமைச்சு கவனம்

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாது என்ற உண்மையை கல்வி அமைச்சு ஏற்றுக்கொள்வதுடன் மாணவர்களின் கவனத்தை ஈர்த்ததாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை முடிக்க முடியாத சூழ்நிலைக்கு தீர்வுகாண பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துடன் பல சுற்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

- Advertisement -

இன்று காலை நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

பரீட்சை நடத்துவதற்கு முன்னர் உயர்தர பாடத்திட்டத்தை உள்ளடக்க இயலாமை குறித்து பல பிரிவுகள் தன்னிடம் கவலைகளை முன்வைத்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயர்தர மாணவர்களின் பாடத்திட்டத்தை உள்ளடக்க விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், ஆசிரியர்களின் வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் தீர்வு வழங்க அதிகாரிகளுடன் மேலும் கலந்துரையாடப்படும் என்றும் கூறினார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!