Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்2022 க.பொ.த. சாதாரண தர பரீட்சை விண்ணங்கள் நாளை முதல் இணையவழியில் ஏற்கப்படும்

2022 க.பொ.த. சாதாரண தர பரீட்சை விண்ணங்கள் நாளை முதல் இணையவழியில் ஏற்கப்படும்

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (பெப்ரவரி 1) முதல் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் இணையவழி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர்கள் ஊடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் விண்ணப்பதாரர்கள் தேவையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தாங்களாகவே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விண்ணப்பங்களை www.doenets.lk மற்றும் http://www.onlineexams.gov.lk/eic அல்லது பரீட்சை திணைக்களத்தின் ‘எக்ஸாம்ஸ் ஸ்ரீலங்கா’ என்ற மொபைல் அப்ளிகேஷன் ஊடாக சமர்ப்பிக்கலாம்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி நள்ளிரவு முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திணைக்களம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular