2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனையை விவாதிக்க அரசு தயாராகி வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தவுடன் சில வாரங்களுக்குள் கலந்துரையாட இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர திட்டமிட்டுள்ளார்.
தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால், வேட்புமனுக்களை இரத்து செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் வக்கும்புர, வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சிறப்பு பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்ட ஆலோசனையைப் பெறுமாறு பரிந்துரைத்துள்ளார்.