இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் https://applications.doenets.lk/exams என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்ப முடிவுத் திகதி பெப்ரவரி 11ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.