Tuesday, December 5, 2023
Homeஉள்ளூர் செய்திகள்4,178 வெற்றிடங்களை நிரப்ப அதிபர் சேவை விண்ணப்பதாரர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு

4,178 வெற்றிடங்களை நிரப்ப அதிபர் சேவை விண்ணப்பதாரர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு

இலங்கை அதிபர் சேவையில் 4 ஆயிரத்து 718 வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி மே மாதம் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை கல்வி அமைச்சின் வளாகத்தில் நேர்முகத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

2019 பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள், 2021 ஜூன் 30ஆம் திகதி வரை இலங்கை அதிபர் சேவையில் தற்போதுள்ள 4 ஆயிரத்து 718 வெற்றிடங்களை நிரப்புவதற்காக பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து நேர்முகத் தேர்வு விண்ணப்பதாரர்களும் மே 19 ஆம் திகதிக்கு பின்னர் http://recruitment.moe.lk இணையத்தளத்திற்குச் சென்று அடையாள அட்டை எண், உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட விவரங்களைச் சமர்ப்பித்து, கொடுக்கப்பட்ட திகதியில் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதை உறுதிப்படுத்துமாறு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

நேர்முகத் தேர்வு உறுதிப்படுத்தல் மற்றும் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட தபாலில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular