Wednesday, March 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்54 கிராம் ஹொக்கைனுடன் மன்னாரைச் சேர்ந்தவர் யாழ்.நகரில் சிக்கினார்

54 கிராம் ஹொக்கைனுடன் மன்னாரைச் சேர்ந்தவர் யாழ்.நகரில் சிக்கினார்

54 கிராம் எடையுள்ள ஹொக்கைன் போதைப்பொருளை உடமையில் யவைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் வைது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னாரைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவரே வியாபார நோக்கத்துக்காக வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருத்தப்பட்ட நஞ்சு வகைகள் அபின் மற்றும் அபாயகரமான கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கிராம் உயிர்க்கொல்லி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கான பிணை கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அண்மைய மாதங்களில் கைப்பற்றப்பட்ட அதிக பெறுமதியான போதைப்பொருளாக இது உள்ளதாக பொலிஸார் கூறினர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular