5 ஆயிரத்து 450 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
இந்த யோசனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பிரேமஜயந்த, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பிரிவுகளுக்கும் ஆங்கிலம் மற்றும் ஏனைய வெளிநாட்டு மொழிகளுக்கும் பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படுவதுடன் தேசிய பாடசாலைகளுக்கான நியமனங்கள் பின்னர் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
நீதிமன்றின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படும் என்று கல்வி அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில், மொத்தம் 7 ஆயிரத்து 342 புதிய ஆசிரியர் நியமனங்கள் அரசினால் வழங்கப்பட்டன.
எவ்வாறாயினும் நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக பல பதவி உயர்வுகள் மற்றும் நியமனங்களை நிறைவு செய்ய முடியாது என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.