7 வயது மாணவி துன்புறுத்தல்; பணம் கொடுக்க பாடசாலை நிர்வாகம் முயற்சிக்கவில்லை – சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தி. அதிபர் விளக்கம்

சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் அண்மையில் 7 வயது மாணவி ஆசிரியரினால் அடித்துத் துன்புறுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து பாடசாலை நிர்வாக பணத்தை வழங்கி சமரசத்துக்கு முயற்சித்ததாக முதல்வன் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்ட விடயத்துக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பாடசாலையின் அதிபர் முதல்வன் இணையத்துக்கு அனுப்பிவைத்துள்ள விளக்கக் கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் ஆசிரியையினால் அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சித்தன்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த 7 வயது மாணவியே அடித்து துன்புறுத்தப்பட்டார்.

கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிய மாணவிக்கு உளநல மருத்துவ வல்லுநரினால் உளநல சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த நிலையிலேயே மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியை கடந்த 16ஆம் திகதி மாலை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான செய்தியை முதல்வன் வெளியிட்டிருந்தான். அதில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பண உதவி வழங்கி இணக்கத்துடன் முடிக்க பாடசாலை நிர்வாகம் முயற்சித்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த விடயத்தை முற்றாக மறுத்துள்ள சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலய அதிபர் பா.பாலசுப்பிரமணியம், அத்தகைய செயற்பாடுகளில் பாடசாலை நிர்வாகம் ஈடுபடவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;