7.9 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் தலைமன்னாரில் சிக்கினர்

தலைமன்னார் கடல் வழியாக நாட்டுக்குக் கடத்தி வரப்பட்ட 79 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த ஒரு டிங்கி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

9 கிலோ 914 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

- Advertisement -

தலைமன்னார், உறுமலை கடற்கரை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையினர் போதைப்பொருள்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

10 பொதிகளில் அடைக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் மொத்த மதிப்பு 79 மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

28 மற்றும் 37 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் தலைமன்னார் உறுமலை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!