Sunday, May 28, 2023
Homeஅரசியல்7,800 பேருக்கு ஜூன் 15இல் ஆசிரியர் நியமனம்

7,800 பேருக்கு ஜூன் 15இல் ஆசிரியர் நியமனம்

ஜூன் மாதத்தில் புதிதாக 7ஆயிரத்து 800 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்வியியல் கல்லூரிகளில் சித்தியடைந்த 7 ஆயிரத்து 800 பேருக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான முதல் படியாக இந்த நியமனங்கள் அமையும் என கல்வி அமைச்சர் கூறினார்.

2024 ஆம் ஆண்டு முதல் க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை ஒரே வருடத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular