9 அணிகள் பங்கேற்கும் யாழ்ப்பாணம் கரபந்தாட்ட சுற்றுபோட்டி ஏப்ரலில்

யாழ்ப்பாணம் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் 2021ஆம் ஆண்டிற்கான ஜேவிஎல் (Jaffna volleyball league) சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று அரியாலை தனியார் விடுதியில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட கரப்பந்தாட்ட சங்க தலைவர் அ.ரவிவர்மன்
தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனை செல்வி தர்ஜினி சிவலிங்கம்,தியாகி அறக்கொடை நிதியத்தின் நிறுவுனர் வா.தியாகேந்திரன், அணி உரிமையாளர்கள், கரப்பந்தாட்ட சங்க உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

அரியாலை கில்லாடிகள், ஆவரங்கால் கிங்ஸ் பைடர்ஸ், மட்டுவில் ஸ்பைக்கர்ஸ், அச்சுவேலி சென்டர் ஸ்பைக்கேர்ஸ், ஸ்புட்னிக் நோர்த் போல்ஸ், ரைசிங் ஜஸ்லான்ட், வல்வையூர் வொலி வோரியஸ், சங்கானை மக்கள் ஒன்றிய சேலஞ்சர்ஸ், நீர்வேலி பசங்க ஆகிய ஒன்பது அணிகளுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் கீழ் இருக்கின்ற கழக அணி வீரர்கள் ஏலம் அடிப்படையில் வரும் 28ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

ஏப்ரல் முதலாம் திகதி சுற்றுப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!