96 கிலோ கிராம் கேரள கஞ்சா நாகர்கோவில் கடற்கரையில் மீட்பு

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரையில் இன்று காலை 96 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

நாகர்கோயில் கடற்கரையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கள ரோந்துப் பணியின் போது கரையோரத்திற்கு அருகில் 3 சாக்குகளில் 96 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டெடுக்கப்பட்டது.

கடத்தல்காரர்களால் அவை கைவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடற்படையினரால் மீட்கப்பட்ட கேரள கஞ்சா இன்று கடற்படையின் மேற்பார்வையில் வடக்கு கடற்படைத் தளத்தில் அழிக்கப்பட உள்ளது.