அரசியல் செய்திகள்

20வது திருத்தத்தை நாடாளுமன்றுக்கு கொண்டுசெல்லுங்கள் – சுமந்திரன் ருவிற்

ஜனாதிபதித் தேர்தலின் பிற்பாடுதான் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பீர்கள் என்றால் அதற்குரிய முதல் நகர்வை எடுத்துவைத்து 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லுங்கள் என்று இன்று தனது ருவிற்றரில் கருத்து வெளியிட்டுள்ளார் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன். ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்க தற்போது எடுக்கும் முயற்சிகள் தவறானவை என்று ஐ.தே.கவின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது ருவிற்றில், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பிற்பாடு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பீர்களெனின் அதற்கு முன்கூட்டிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் …

Read More »

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க இப்போது முயற்சிப்பது வேடிக்கையாக உள்ளது – மைத்திரி தெரிவிப்பு

நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை இரத்து செய்ய வேண்டும் என்பது அன்று முதல் இன்று வரை தான் பின்பற்றும் அரசியல் கொள்கையாகும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி , அச்செயற்பாடுகளுக்கு தடையாக இருந்தது தான் அல்ல நாடாளுமன்றமே என்றும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் அதற்காக முயற்சிப்பது வேடிக்கையான விடயம் என்றும் தெரிவித்தார். இன்று (21) பிற்பகல் நாவுலவில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்டத்திற்கான மாநாட்டின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்காக அண்மையில் கூட்டப்பட்ட அவசர …

Read More »

என்டர்பிரைஸ் சிறிலங்கா யாழ். கண்காட்சியில் 2 லட்சம் பேர் பங்கேற்பு – நிதி அமைச்சர்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற என்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சி வெற்றிகரமாக அமைந்ததாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சி.முத்துக்குமாரண வாய்மூலமாக கேட்ட கேள்வி ஒன்றிற்கு பலிலளிக்கையிலேயே நிதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். “4 நாள்களாக நடைபெற்ற இந்த கண்காட்சியை 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டுள்ளனர். போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வெற்றிகரமான கண்காட்சி இதுவாகும். இந்த கண்காட்சி மூலம் அங்குள்ள மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியது. மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற கண்காட்சி மூலமும் பலர் நன்மை அடைந்துள்ளனர். …

Read More »

சந்தர்ப்பவாதமும் சுயநலமும் உச்சத்தை எட்டி கால்நூற்றாண்டு வாக்குறுதிகளை கைவிடுவதா?- நல்லாட்சிக்காரர்களிடம் சுமந்திரன் எம்.பி.கேள்வி

நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணைந்து முன்னெடுக்கும் முயற்சிகள் குறித்து கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சந்தர்ப்பவாதமும் சுயநலமும் உச்சத்தை எட்டி கால்நூற்றாண்டு வாக்குறுதிகளை கைவிடுவதா? என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுதொடர்பில் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளதாவது; நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கும் நல்லாட்சிகார்ரை குறித்து கவலைப்படுகிறோம். சந்தர்ப்பவாதமும் சுயநலமும் உச்சத்தை எட்டி கால்நூற்றாண்டு வாக்குறுதிகளை கைவிடுவதா? கொள்கை அளவில் எந்த நேரத்திலும் நிறைவேற்று …

Read More »

முன்னாள் படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவிகள்

முன்னாள் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உயர் கௌரவ பதவி நிலைகளை வழங்கினார். முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் த பிளீட் ஆகவும், முன்னாள் விமானப்படைத் தளபதி றொஷான் குணதிலக, மார்ஷர் ஒவ் த எயர் போர்ஸ் ஆகவும் கெளரவ பதவி நிலைகளைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இந்த உயர் பதவிகளை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் இடம்பெற்றது. இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் கடற்படைத் தளபதியாக பணியாற்றிய அட்மிரல் வசந்த …

Read More »

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பு – சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் பிசுபிசுப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான சட்டவரவை நிறைவேற்றுவதற்காக கூட்டப்பட்ட அவசர அமைச்சரவைக் கூட்டம் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே இன்று காலை இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து அவசர சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 3 மணிக்குக் கூட்டப்பட்டது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் வகையில் ஜேவிபி கொண்டு வந்த 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவையில் ஒப்புதலுக்காக முன்வைத்தார். இந்த திருத்த வரைவுக்கு அமைச்சரவை …

Read More »

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் முயற்சிக்கு சஜித் அணி போர்க்கொடி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கும் திட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இன்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிப்பதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாகவும், இதற்கான எந்த முயற்சிகளும், ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக, அமைச்சர் …

Read More »

ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியது

2019ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் கட்டுப் பணம் செலுத்தும் காலம் நாளை நண்பகல் 12 மணி தொடக்கம் ஒக்டோபர் 6ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வரையறுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இடம்பெறும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Read More »

புதிய சுற்றறிக்கையால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களை நிரந்தமாக்க அமைச்சரவை ஒப்புதல்

அரச நிறுவனங்களில் ஆரம்பத் தரத்திற்குரிய பதவிகளில் தற்காலிகமாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் சலுகை அடிப்படையிலும் பிரதியீடாகவும் சேவையில் இணைந்து 180 நாள்களுக்கும் அதிகமாகப் பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அரச நிர்வாக சுற்றறிக்கை 25/2014 மற்றும் 25/2014 (1) வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட தேவையை நிறைவு செய்யாததினால் சேவையின் உறுதித் தன்மையைப் பெற்றுக் கொள்ளமுடியாத ஊழியர்களைப் போன்று சுற்றறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் சேவை தேவை அடிப்படையில் அரச நிறுவனங்களில் ஆரம்ப தரங்களுக்கு உள்பட்ட பதவிகளுக்கு அமைய நாள் சம்பளம் …

Read More »

உப்பளத்தை அகற்ற சிறிதரன் எம்.பி. எடுத்த முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு – வாக்கு கேட்டு வரவேண்டாம் என்றும் தெரிவிப்பு

கிளிநொச்சி – குஞ்சு பரந்தன் பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரால் முன்னெடுக்கப்படும் உப்பளத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்ட பிரதேச சபை உறுப்பினரை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் திட்டித் தீர்த்து திருப்பி அனுப்பினர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனையும் மக்கள் இதன்போது கடுமையாக விமர்சித்தனர். செருக்கன் கிராமத்தில் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களே உப்பளத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கரச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜூவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா ஆகியோரே அந்தக் கிராமத்துக்குச் …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!