இந்தியா

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோவுக்கு ஒரு வருட சிறை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில், அவர் குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட சபை உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் வைகோவுக்கு ஓராண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் தண்டமும் விதித்து உத்தரவிட்டார். ஜூலை 5ஆம் திகதி கரும்புலிகள் நாளான இன்று இந்தத் தண்டனைத் தீர்ப்பு வைகோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 2009ஆம் ஆண்டு தொடரப்பட்ட தேசத் …

Read More »

இலங்கைத் தமிழர்கள் 65 பேர் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

இலங்கையைச் சேர்ந்த ஒப்பந்தத் தோட்டத் தொழிலாளர்கள் வம்சாவளியைச் சேர்ந்த 65 தமிழர்கள் இந்தியக் குடியுரிமை கேட்டு செய்திருந்த மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உடனடியாகத் தாமதிக்காமல் மத்திய அரசுக்கு குடியுரிமை விண்ணப்பத்தை அனுப்பி வைக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார். மத்திய அரசு இதன் மீது 16 வாரங்களில் முறையான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். அதாவது மனுதாரர்கள் இருக்கும் ஒரு தனிப்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு …

Read More »

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல்; கோவையில் மேலும் நால்வர் கைது

இலங்கையில் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்கதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி கோவையில் மேலும் மூவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர பொலிஸ் நுண்ணறிவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தேசிய புலனாய்வு நிறுவனத்தால் வேறு ஒரு நபரும் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர பொலிஸ் நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வந்த முகமது உசைன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய மூன்று சந்தேகநபர்களை நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ …

Read More »

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய அறுவர் கோவையில் சிக்கினர் – இந்திய புலனாய்வுப் பிரிவு தகவல்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்தியா, கோவையைச் சேர்ந்த 6 பேருக்கு எதிராக அந்த நாட்டு தேசிய புலனாய்வுப் பிரிவால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என …

Read More »

சஹ்ரானின் முகநூல் நண்பரின் வீட்டில் இந்திய புலனாய்வு அதிகாரிகள் சோதனை

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளில் இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பின் அதிகாரிகள் இன்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரர்கள் யார் தெரியுமா? கோயம்புத்தூரிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.இன்று காலை ஆறு மணிக்கு இந்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் கோயம்புத்தூரில் இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இலங்கை குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான தேசிய தவ்ஹீக் ஜமாத் அமாத் அமைப்பின் …

Read More »

கிரேஸி மோகன் காலமானார்

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 66. இன்று காலை 11 மணி அளவில் கிரேஸி மோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது. 1952-ல் பிறந்த கிரேஸி மோகன், 1983-ல் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் திரையுலகுக்குள் நுழைந்தார். 1989-ல் அபூர்வ சகோதரர்கள் படம் மூலமாக …

Read More »

முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் முடிவை வழங்க தமிழக அரசுக்கு 2 வாரங்கள் அவகாசம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வார காலஅவகாசம் கோரியுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 7 …

Read More »

இந்திய வெளிவிவகார அமைச்சராக ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சராக, முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று மாலை புதுடில்லியில் நடந்த நிகழ்வில் பதவியேற்றது. இந்த நிகழ்வில், இந்திய வெளிவிவகாரச் சேவையின் முன்னாள் மூத்த அதிகாரியான, சுப்ரமணியம் ஜெயசங்கரும், இந்திய மத்திய அமைச்சராக பதவியேற்றார். அவர், இந்திய வெளிவிவகார அமைச்சராக  நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த போது, நரேந்திர மோடி அரசின்,  வெளிவிவகாரக் கொள்கைகளில் ஏற்படும், சிக்கல்களை தீர்ப்பவராக ஜெய்சங்கர் விளங்கினார். அதனால், 2018ஆம் ஆண்டு …

Read More »

பாரதத்தின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்றார் நரேந்திர மோடி

இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில், நரேந்திர மோடி பாரதத்தின் பிரதமராக 2-வது முறையாக பதவியேற்றார். புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள் என விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, விழாவுக்கு குடியரசுத் தலைவர் வருகை தந்தார். அவரது வருகையை அடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதையடுத்து, நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராகப் பதவியேற்றார். இவரைத்தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, சதானந்த கௌடா, நிர்மலா …

Read More »

இந்தியா “இந்து தேசம்’: சர்ச்சைக்குரிய தீர்ப்பை ரத்து செய்தது மேகாலய உயர்நீதிமன்றம்

இந்தியா, “இந்து தேசம்’ என்று தனி நீதிபதி அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை மேகாலய உயர் நீதிமன்றம் சனிக்கிழமை ரத்து செய்தது. மேகாலயத்தில் ஒருவருக்கு மாநில அரசு இருப்பிடச் சான்று வழங்க மறுத்த விவகாரத்தை அந்த மாநில உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் விசாரித்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.சென் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருந்ததாவது: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக அறிவிக்கப்பட்டது. மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்ததால், அப்போதே இந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும். …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!