இந்தியா

ஈழத் தமிழர் நினைவேந்தலைத் தடுத்தது தமிழகப் பொலிஸ் – வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கிடையே சென்னை மெரினா பகுதியில் ஈழத்தமிழர்கள் நினைவேந்தல் பேரணியை நடத்த முயன்ற மதிமுக பொதுச் செயலளார் வைகோ, திருமுருகன் உள்ளிட்டோரை தமிழகப் பொலிஸார் கைது செய்தனர். சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், உத்தரவை மீறி மெரினாவில் நிகழ்வுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க மெரினா  பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மெரினாவில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை …

Read More »

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் 71ஆவது வயதில் இன்று (மே 15) காலமானார். உடல் நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பயனின்றிக் காலமானார். தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் பாட்ஷா, நாயகன், குணா, புதுப்பேட்டை உள்ளிட்ட பல சினிமாவிலும் பாலகுமாரனின் பங்களிப்பு முக்கியமானது. அவருடைய எழுத்துக்களைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள் பலர். அவரால் எழுத்தாளரானவர்களும் உள்ளனர். சுப்பர் ஹிட் படங்களான பாட்ஷா, குணா, முகவரி, சிட்டிசன், உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார். ரசிகர்களின் அன்பால் எழுத்துச் சித்தர் என்று அழைக்கப்படுபவர் பாலகுமாரன். தமிழக …

Read More »

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு 32 கிலோ தங்கம் கடத்தல் – 6 பேர் சிக்கினர்

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 10 கோடி ரூபா இந்தியப் பெறுமதியில் 32 கிலோ எடை தங்கத்தை இந்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைக் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் உள்பட 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மண்ணடியில் ஒரு கும்பல் தங்கக் கடத்தலில் ஈடுபடுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவுக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மண்ணடியில் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் பையுடன் நடந்து வந்த ஒருவரிடம் அதிகாரிகள் விசாரணை …

Read More »

தன் மீதான குற்றச்சாட்டுக்களை தானே வாதடி முறியடித்தார் முருகன்

வேலூர் மத்திய சிறை அறையில் இருந்து கைபேசிகள் கைப்பற்றப்பட்ட வழக்கிலிருந்து ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி முருகன் விடுவிக்கப்பட்டார். ஈழம் – யாழ்ப்பாணத் தமிழரான முருகன் என்கிற ஸ்ரீஹரன், தன் மீதான குற்றச்சாட்டுகளை தானே வாதாடி வெற்றி பெற்றார். வேலூர் நீதித் துறை நடுவர் மன்றம் எண் 1-இல் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், அவரது மனைவி நளினி ஆகியோர் கடந்த …

Read More »

புலிகளின் மீள உருவாக்கத்துக்கு உதவியதாக நால்வருக்கு சிறை – தமிழக நீதிமன்றம் தீர்ப்பு (சீராக்கம்)

தமிழகம் உச்சிப்புளி அருகே  சயனைட் குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை தீர்ப்பளித்தது. இராமநாதபுரத்திலிருந்து மண்டபம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி அருகே 2015ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி தமிழகப் பொலிஸாரின் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் என்ற சாந்தன்(வயது -39), உச்சிப்புளியைச் சேர்ந்த கார் சாரதி சசிக்குமார்(வயது …

Read More »

கதுவா சிறுமியை கொலை செய்தது ஏன்? சஞ்சி ராமின் திடுக்கிடும் வாக்குமூலம்

கதுவா சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது. கதுவா வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி இது பற்றி கூறுகையில், முஸ்லிம் பக்கர்வால் சமுதாய மக்களை மிரட்டவே, கதுவா சிறுமியை கடத்தி வந்து அடைத்து வைத்துள்ளார் சஞ்சி ராம். ஆனால், அச்சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதும், அந்த குற்றத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதை அறிந்த பிறகே, மகனைக் காப்பாற்ற சிறுமியைக் கொலை செய்ய முடிவெடுத்ததாக விசாரணையின் போது கூறியதாகத் தெரிவித்துள்ளார் கதுவா சிறுமி …

Read More »

நளினியை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது – சென்னை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

  முன்கூட்டியே விடுவிக்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை மேல் நீதிமன்றம், நளினியை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தது. இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, இந்த வழக்கில் மேல் நீதிமன்றால் தலையிட முடியாது என்று சென்னை மேல் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-இன் படி முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனைக் கைதியான நளினி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை மேல் நீதிமன்றம் இன்று …

Read More »

ரூ.10,000 கோடி சொத்துக்கு அதிபதி ஆசாராம்

சிறுமியை பாலியல் கொடுமைப்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றுள்ள சாமியார் ஆசாராம், 1970-களில் சபர்மதி ஆற்றங்கரையோரத்தில் குடிசை ஒன்றை அமைத்து ஆன்மிகப் பயணத்தை தொடங்கியவர். இன்றைய தினம் அவருடைய மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள கிளைகளை சேர்த்து ஆசாராமுக்கு சொந்தமாக 400 ஆசிரமங்கள் உள்ளன. ஆசாராமின் வாழ்க்கை வரலாறு குறித்த காணொலி ஒன்றை அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காண முடிகிறது. அந்த விவரங்களின்படி, பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள பெரானி கிராமத்தில் …

Read More »

தற்கொலை செய்ய அனுமதி கோரி 5,000 விவசாயிகள் மனு

குஜராத்தில் தற்கொலை செய்து கொல்ல அனுமதிக்குமாறு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கதிராமங்கலம், நெடுவாசல் போல குஜராத் மாநிலம் பாவ்நகரில் அனல்மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 150 நாள்களை கடந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விளைநிலங்களை அரசு கட்டாயப்படுத்தி கையகப்படுத்துவதால் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழக்க நேரிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலங்களை பறித்துவிட்டால் வாழ வழியில்லை என்பதால் …

Read More »

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சாமியார் ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் உள்ளிட்ட 5 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஆசாராம் பாபு அடைக்கப்பட்டிருக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பில், “சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஆசாராம் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம் செய்யப்பட்டுள்ளது” என்று நீதிபதி குறிப்பிட்டார். 2013ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆசாராம் பாபு வழக்கு …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!