உலகம்

பருவநிலைக்காக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பருவநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து கடல் நீர் உயர்ந்து வரும் அபாயத்தை உலகத் தலைவர்களுக்கு உணர்த்தும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளில் இன்று மாணவர்களால் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன. சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த கிரெட்டா துன்பர்க் என்ற சிறுமி பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு தனியாளாகப் போராடத் தொடங்கி உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவரது தலைமையில், ‘பருவநிலையைப் பாதுகாக்க பள்ளி வேலை நிறுத்தம்’ என்ற அமைப்பு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் உலகம் முழுவதும் …

Read More »

ஆஸ்திரேலியப் பள்ளிகளில் தமிழ்மொழி

ஆஸ்திரேலியப் பாடசாலைகள் சிலவற்றில் அடுத்த கல்வியாண்டுமுதல் தமிழ்மொழி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆஸ்திரேலியாவில் பல்வேறு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில், உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மொழிகளை பள்ளிப் பாடத் திட்டத்தில் இரண்டாவது மொழியாகச் சேர்த்து வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக தற்போது தமிழ் மொழியை, முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை பள்ளிகளில் பயிற்றுவிக்க நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் இரண்டாவது பயிற்சி மொழியாக தமிழ் மொழி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான புதிய …

Read More »

தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டம்

ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக 3ஆவது நாளாக இன்றும் தலிபான்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மருத்துவமனையை இலக்குவைத்து இன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த மருத்துவமனை தரைமட்டமாகியது. தலிபான்களின் வன்முறைகளால் அப்பாவிப் பொதுமக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். தலிபான்களுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததையடுத்து அமெரிக்கா தனது படைகளை அங்கிருந்து திரும்பப் பெறப்போவதில்லை என்ற ஆத்திரத்தில் தலிபான்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தப் பின்னணியிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்றைய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர். காயமடைந்த சிலரின் …

Read More »

வீழ்ந்தார் நெதன்யாகு

இஸ்ரேலில் தனித்து ஆட்சியமைக்காத நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளார் அந்த நாட்டின் தற்போதைய பிரதமரான நெதன்யாகு. எதிர்க்கட்சியை விடவும் அவரின் லிகுட் கட்சி பின்தங்கிய நிலையிலுள்ளது. 120 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி, எதிர்க்கட்சியும் இடதுசாரியான பென்னி காட்ஸ் தலைமையிலான புளு அன்ட் வைட் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இஸ்ரேலில் இன்னும் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 95 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் பிரதமர் பெஞ்சமின் …

Read More »

அமெரிக்காவுடன் போருக்குத் தயார் – ஈரான் அறிவிப்பு

சவூதி கச்சா எண்ணெய் ஆலை தாக்குதல் விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அத்துடன் போருக்கும் தயார் என்று தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய்க் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா வானூர்திகள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த …

Read More »

வடகொரியப் பயணம் தற்போதில்லை

குறுகிய காலத்தில் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள விரும்பவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கு வருமாறு அந்த நாட்டுத் தலைவர் கிம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு அழைப்பு விடுத்தாக தகவல்கள் வெளியாகியது. இது தொடர்பாக வெள்ளைமாளிகையில் ட்ரம்பிடம் பத்திரிகையாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு ட்ரம்ப் பதில் கூறும்போது, ‘அமெரிக்கா – வடகொரியா இரு நாடுகள் இடையே நட்புறவு நீடிக்கிறது. ஆனால் அது குறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை. நான் எதிர்காலத்தில் அப்போது உள்ள சூழலை பொறுத்து வடகொரியாவுக்கு நிச்சயம் பயணிப்பேன். கிம்மும் …

Read More »

வெல்வாரா நெதன்யாகு?

இஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக இன்று பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் நெதன்யாகு வெற்றிபெறுவாரா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது. ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வென்று மீண்டும் இஸ்ரேலின் பிரதமரானார் பெஞ்சமின் நெதன்யாகு. மொத்தமுள்ள 120 இடங்களில், 65 இடங்களில் நெதன்யாகுவின் லுகுட் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்று ஆட்சியைப் பிடித்தன. எனினும் தொடர்ந்து கட்சிகளை இழுத்து கூட்டணி அமைக்க முடியாததால் அரசு அமைக்கும் வாய்ப்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து செப்ரெம்பர் …

Read More »

600,000 ரொஹிங்யர்களுக்கு ஆபத்து

ரொஹிங்ய முஸ்லிம்கள் 6 லட்சம் பேர் மியான்மரில் இருப்பது இன அழிப்புக்கான ஆபத்து என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்த நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. …

Read More »

ட்ரம்புக்கு கிம் அழைப்பு

வடகொரியத் தலைநகர் பியோங்யாங் வருமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். சிங்கப்பூர், வியட்நாம், தென்கொரியா ஆகிய நாடுகளில் இந்த இரு ஜனாதிபதிகளும் இதுவரை மூன்று தடைவைகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் வடகொரியா மீது தன்னால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா கைவிடவில்லை. அதேபோன்று அணுவாயுதச் சோதனையை வடகொரியா விட்டுக்கொடுக்கவும் இல்லை. இந்த விவகாரம் தற்போது மீண்டும் படிப்படியான பூதாகரமாகி வரும் நிலையில் கிம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்புக்கு வெள்ளைமாளிகை எந்தப் பதிலும் …

Read More »

காஷ்மீர் சிறார்களுக்காக மலாலா மன்றாட்டம்

காஷ்மீரில் பதற்றமான சூழல் நீடித்துவரும் நிலையில் அங்கு வாழும் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல உதவவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு நோபல் பரிசு வென்றவரும், கல்வி உரிமை ஆர்வலருமான மலாலா யூசுப்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த இந்திய மத்திய அரசு, அரசியலமைப்புச்சட்டம் வழங்கிய 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதியில் இருந்து காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களை மாநில நிர்வாகம் திறந்தபோதிலும் அங்கு …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!