உலகம்

பிரிட்டன் ஆயுதப்படைகளில் இணைவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு

பிரிட்டனில் வசிக்காத இலங்கையர்களும்கூட பிரிட்டன் ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்று அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்துள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, கென்யா, பிஜி, உள்ளிட்ட பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்தவர்கள்- பிரிட்டனில் வசிக்காத போதும், பிரிட்டன் ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரிட்டன் ஆயுதப்படைகளில் சேர்த்துக் கொள்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்தும் இந்த முடிவு நேற்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் இணைந்து கொள்வதற்கு, குறைந்தது …

Read More »

இந்தோனேஷிய விமான விபத்தில் 189 பேர் உயிரிழப்பு

189 பேருடன் இந்தோனேஷிய விமானம் திங்கள்கிழமை கடலில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்திலிருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த லயன் ஏர் தனியார் நிறுவனம், குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங்-737 மேக்ஸ் ரக விமானமொன்று தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்க்கா பெலிதுங் மாகாணத் தலைநகர் பங்கால் பினாங் நகர விமான நிலையத்தை நோக்கி உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு (இலங்கை நேரப்படி அதிகாலை 5 மணி) புறப்பட்டது. …

Read More »

பயனாளர்களின் தகவல் திருட்டு: முகநூல் நிறுவனத்திற்கு பிரிட்டன் ரூ.11 கோடி தண்டம் விதிப்பு

பயனாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில், முகநூல் நிறுவனத்திற்கு பிரிட்டன் தகவல் ஆணைக்குழு 5 இலட்சம் பவுண்ட்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 110கோடி) தண்டம் விதித்துள்ளது. 2007 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் உரிய மற்றும் வெளிப்படையான அனுமதியின்றி பயன்படுத்தியதாக, முகநூல் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா என்னும் தேர்தல் பரப்புரை மற்றும் அது தொடர்பான தகவல் திரட்டல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது, இவ்வாறு சேகரிக்கப்பட்ட முகநூல் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் …

Read More »

பாரக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் வீடுகளுக்கு வெடிகுண்டுகள் பார்சல்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரது வீடுகளுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டது இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்ததாவது: பாதுகாப்பு மிக்க முக்கிய நபர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் பாரக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரது பெயர்களில் வந்திருந்திருந்த பார்சல்களும் கண்காணிக்கப்பட்டன. இந்நிலையில், அந்த பார்சல்களில் வெடிகுண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவை உரிய பாதுகாப்புடன் செயலிழக்கச் செய்யப்பட்டன. இது …

Read More »

சதா சர்வ காலமும் கைபேசியும் கையுமாக இருக்கிறீர்களா? இது உங்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட்!

அதிதிறன் கைபேசி (ஸ்மார்ட் போன்) பயன்படுத்தும் பெரும்பாலான இளைஞர்கள் சதா சர்வகாலமும் அதிலே லயித்துக் கிடக்கிறார்கள். இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் இதற்கு அடிமையாகிக் கிடப்பதைப் பார்க்கிறோம். உண்ணும் போதும் உறங்கும் போதும் கூட இந்த கைபேசிதான் பொழுதுகள் கழிகின்றன. இது எத்தகைய ஆபத்துக்களை வரவழைக்கும் என்று தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் அந்தத் தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்கின்றனர். தேவையான சமயங்களில் மட்டும் கைபேசியில் பேசிவிட்டு அல்லது பயன்படுத்திவிட்டு அதைத் தூர வைப்பது உடல் மற்றும் மனதுக்கு நல்லது. அண்மையில் …

Read More »

வட்ஸ் அப் வீடியோ அழைப்பால் ஹக் அபாயம்

வட்ஸ் அப் வீடியோ அழைப்பு பயன்படுத்துபவர்களின் கணக்குகள் ஹக் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக லண்டனைச் சேர்ந்த (ZDnet and The Register) இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட்ஸ் அப் செயலியை சமீபத்தில் முகநூல் நிறுவனம் தன்வசப்படுத்தியது. வட்ஸ் அப் செயலி, அண்ட்ரொய்டு மற்றும் அப்பிள் ஐபோன்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகையில்,வட்ஸ் அப் வீடியோ அழைப்புகளின் மூலம் கணக்குகள் ஹக் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதை, கடந்த ஓகஸ்ட் மாதத்திலேயே கண்டறிந்ததாகவும், அந்த தொழில்நுட்ப குறைபாட்டை, ஒக்டோபர் முற்பகுதியில் சரி செய்துள்ளதாக முகநூல் தரப்பில் …

Read More »

தகவல் திருடப்பட்டதாக எழுந்த சர்ச்சையால் மூடப்படுகிறது ‘கூகுள் பிளஸ்’

பிரபல சமூகவலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’ பயனாளர்களின் தனிப்பட்ட கணக்கு விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து அது மூடப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக ஊடக நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமான கூகுள் பிளஸ் சேவை 2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் கூகுள் டொக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் சேவை தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், டிரம்பின் …

Read More »

அமெரிக்கர்கள் இருவருக்கு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு

  பருவ நிலை மாற்றமானது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தொடர் பாதிப்புகள் குறித்த ஆய்விற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் இருவருக்கு 2018-ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் கடந்த வாரம் திங்கள் முதல் வெளியிடப்படுகிறது. அதன்படி முதலாவதாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பும், தொடர்ந்து செவ்வாயன்று இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது. பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பும் வெளியானது. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் குழுவினர் இதனை வெளியிட்டனர். இந்நிலையில் …

Read More »

ரூபா 17 கோடி மதிப்புள்ள விண்கல்லை 30 ஆண்டுகளாக வீட்டின் கதவு முட்டுக்கொடுக்கப் பயன்படுத்திய அவலம்!

சுமார் 17 கோடி ரூபா விலைமதிப்புடைய விண்கல்லை, ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக தன் வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப் பயன்படுத்திய சுவாரஸ்யமும், அவலமும் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளரான மோனா சிர்பெஸ்குவிடம் அதே பகுதியை சேர்ந்த பெயர்கூறப்படாத மனிதர் ஒருவர் தன் வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப் பயன்படுத்தி வந்த ஒரு கல்லை கொடுத்து அதன் தன்மைகள் குறித்து சோதனை செய்யக் கூறியுள்ளார். சுமார் 10 கிலோ எடைக்கொண்ட அந்த …

Read More »

இன்டர்போலின் தலைவரைக் காணவில்லை – அவரது மனைவி வழங்கிய முறைப்பாட்டால் பரபரப்பு

‘இன்டர்போல்’ என் அழைக்கப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் தலைவரான மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி முறைப்பாடு செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்தவர் மெய்ங் ஹாங்வாய். சீனாவின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சராக பணியாற்றி வருகிறார். அத்துடன் சர்வதேச பொலிஸின் தலைமை ஒருங்கிணைப்பு அமைப்பான ‘இன்டர்போல்’ அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இன்டர்போல் அமைப்பின் தலைமையகமானது பிரான்ஸின் லியான் நகரில் அமைந்துள்ளது. அங்குதான் ஹாங்வாய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!