உள்ளூர் செய்திகள்

ரயில்வே போராட்டம் முடிவு

ஊதிய அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தீர்வைக் கோரில் ரயில்வே ஊழியர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட சில மணிநேரங்களில் ரயில்வே துறையினருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே போராட்டம் நிறுத்தப்பட்டது. எனினும் போராட்டம் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Read More »

முல்லைத்தீவில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது – பொலிஸில் முறைப்பாடு

புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவில் தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என அந்த மாவட்ட பொலிஸ் தலைமையகத்தில் பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.  முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்து முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றின் ஆதரவுடன் பிள்ளையார் ஆலய வழிபாடுகளுக்கு செல்பவர்களுடன் முரண்பாடுகளை தோற்றுவித்து வந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி, புற்றுநோய் காரணமாக கொழும்பில் …

Read More »

மாணவர் அனுமதிக்கு பணம் வேண்டிய அதிபர்கள் மீது விசாரணை- ஆளுநரின் பணிப்பில் துரித நடவடிக்கை

பாடசாலையில் மாணவர் அனுமதிக்கு பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டு முன்வைக்கட்ட பாடசாலை அதிபர்கள் இருவருக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபருக்கும் தென்மராட்சி கல்வி வலயத்தில் பிரபல பாடசாலையின் அதிபருக்கும் எதிராகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதிபர்கள் இருவர் மீதும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிர்வாக மட்ட விசாரணைகளில் மோசடிகள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் இருவருக்கும் எதிராக சட்டரீதியான …

Read More »

பர்தாவுக்கு இனி தடையில்லை

முஸ்லிம் பெண்களின் முகத்தை மூடும் வகையிலான ஆடைகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் பரவலாகத் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் வகையிலான பர்தா, நியாப் ஆடைகள் அணியத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அவசரகாலச் சட்டம், பயங்கரவாதச் சட்டம் என்பன நீக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த ஆடைகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையம் அறிவித்துள்ளது. …

Read More »

தேசிய புதிர் போட்டியில் வடக்கு, கிழக்கு அணிகள் சாதிப்பு

தேசியமட்ட கணித புதிர் போட்டியில் மூத்த பிரிவில் வடக்கு மாகாண அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கொழும்பில் இன்று சனிக்கிழமை இந்தப் போட்டி நடைபெற்றது. 326 புள்ளிகளுடன் கிழக்கு முதலாம் இடத்தையும், 324.17 புள்ளிகளுடன் வடக்கு இரண்டாம் இடத்தையும், 305.17 புள்ளிகளுடன் மேல் மாகாணம் மூன்றாம் இடத்தையும் பெற்றன. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி பி.ஹரிணி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஜி.கிரிஷிகன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் எல்.அகர்ஷன், பி.நேசிகன், சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவிகள் எஸ்.வனோஜா, …

Read More »

ஆடரம்பர மோட்டார் சைக்கிள் கடத்தி எரிப்பு

இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலையடுத்து மோட்டார் சைக்கிள் ஒன்று கடத்திச் செல்லப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 7 லட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆடம்பர மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு எரியூட்டப்பட்டது என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. குமாரசாமிபுரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இனம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று வள்ளுவர்புரம் பகுதியில் வைத்து எரித்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தருமபுரம் …

Read More »

இலங்கையில் மீண்டும் எலிக்காய்ச்சல்

இலங்கையில் கடந்த ஆண்டு எலிக்காய்ச்சலால் சுமார் 80 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் குறித்த நோய் தீவிரமாகப் பரவி வருகிறது என்று சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. எலிக் காய்ச்சலால் விவசாயிகள் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் அவர்களை கூடுதலான அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் காய்ச்சல், கண்களில் எரிச்சல், கண்கள் சிவப்பு நிறமாதல், உடல் நோ, தடிமன் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டால் பொதுமக்கள் தாமதிக்காது அருகிலுள்ள மருத்துவமனையை நாடவேண்டும் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

Read More »

அதிபர் சதா நிமலன் ஒக். 3 வரை விளக்கமறியலில்- கொழும்பு நீதிமன்றில் இனி முற்படுத்தப்படுவார்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலனை ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில்  முற்படுத்தி வரும் ஒக்டோபர் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் உத்தரவு பெறப்பட்டது. அத்துடன் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நீதிமன்றம் அனுமதியளித்தது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்று ஊழலில் ஈடுபட்டார் என்று அந்தக் கல்லூரியின் அதிபர் சதா நிர்மலன் இன்று நண்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி சாட்டுதல்களை புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் …

Read More »

யாழ் பல்கலையில் வடக்குக்கு முன்னுரிமை

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆட்சேர்ப்பில் வடக்கு மாகாணத்துக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார் ஹக்கீம். 400 பேர் கொண்ட தகவல்களைக் குறித்து வெளிவரும் கருத்துக்களில் சிறு உண்மையும் இல்லை. வடமேல் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருந்து சிலர் உள்வாங்கப்பட்டிருந்தாலும் வடக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களை அந்தப் பட்டியலில் சேர்க்குமாறு தெரிவித்து செயலாளர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைத்திருக்கின்றார் என்பதுதான் உண்மை. அதற்கப்பால் எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை என்பதை உறுதியாகத் …

Read More »

குறுநாடகப் போட்டியில் அருணோதயாவுக்கு முதலிடம்

இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான குறுநாடகப் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்தார். ந.தேனுஜா என்ற மாணவிக்கே அவ்வாறு முதலிடம் கிடைத்தது. தேசிய மட்ட தமிழ்த் தின போட்டிகள் கொழும்பு கல்வி அமைச்சின் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றன. ஐந்தாம் பிரிவினருக்கான குறுநாடகப் போட்டியிலேயே தேனுஜா முதலிடம் பிடித்தார்.

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!