உள்ளூர் செய்திகள்

3000 படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் தேடுதல்

ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் நேற்று சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர். பொலிஸாருடன், 3000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இந்த தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும், இது போன்ற தேடுதல்கள், பிராந்திய பாதுகாப்பு படை தலைமையகங்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று இராணுவ பதில் பேச்சாளர் மேஜர் ஜெனரல் றொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

Read More »

வாள்வெட்டு வன்முறை: தனுரொக்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவர் உள்பட 9 பேர் கைது

தனு ரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் மற்றும் நவாலிப் பகுதிகளில் வைத்து அவர்கள் 9 பேரும் இன்று மாலை கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “தனு ரொக்கின் பிறந்த நாள் இன்று என்ற தகவல் அறிந்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரத்னவின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவினர் மானிப்பாய் பகுதியில் சிவில் உடையில் களமிறக்கப்பட்டனர். மானிப்பாயில் தனு ரொக்கின் வீடு …

Read More »

245 கிலோ கேரளக் கஞ்சாவுடன் இருவர் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கைது

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் 245 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். டிங்கி படகொன்றில் கேரளக் கஞ்சாவை கடத்திச் சென்ற போதே சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார். “வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என்று கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். மருதங்கேணி கடற்ப்பரப்பில் வைத்து 132 …

Read More »

யாழ்ப்பாணம், மன்னார் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம்

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் (அத்தியட்சகர்) தினேஷ் கருணாரத்ன, நுகேகொட பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றம் பெற்றுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்கள் நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பணியாற்றும் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்களும் அடங்குகின்றனர். யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் (அத்தியட்சகர்) தினேஷ் கருணாரத்ன, நுகேகொட பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றம் பெற்றுள்ளார். எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் டி.ஜி.ரி.டபுல்யூ. தல்டுவ, யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். …

Read More »

ஆஸி. பயணித்த 41 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக படகுமூலம் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த 41 பேரைக் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கைக் கடற்பரப்பில் ஆயிரத்து 370 கிலோ மீற்றர் தொலைவில் படகில் பயணித்த வேளை அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 32 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 4 சிறுவர் அடங்குவதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். சட்டவிரோத கடத்தல்காரர்களால் ஒரு குழுவினர் ஆஸ்திரேலியாவுக்கு படகுமூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்று கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே 41 பேரும் கைது செய்யப்பட்டனர் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Read More »

குருநாகல் மருத்துவர் கைது – சந்தேகத்துக்கு இடமாக சொத்துச் சேகரித்த குற்றச்சாட்டில்

சந்தேகத்திற்குரிய முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குருநாகல் போதனா மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சொத்து சேகரித்தமை தொடர்பில் குருநாகல் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்றிரவு மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபி (42 வயது) என்பவரே கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபி, சட்டவிரோதமாக சிங்களப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சையை மேற்கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் …

Read More »

சுவிஸ் குமாரை விடுவித்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை – சட்ட மா அதிபர் நடவடிக்கை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராகவே இந்தக் குற்றப்பத்திரிகை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதுதொடர்பான ஆவணங்களை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அனுப்பிவைத்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. புங்குடுதீவு …

Read More »

ஆவா குழுவினர் திருந்திவிட்டனர் – வடக்கிலிருந்து மாற்றலாகும் டீஐஜி பெருமிதம்

“யாழ்ப்பணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் தற்போது திருந்தி சமூகத்தில் நல்லவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்திய பெருமையுடன் வடக்கில் இருந்து மாற்றலாகின்றேன்” இவ்வாறு வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ தெரிவித்தார். அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சிலரை அவர் இன்று தனது அலுவலகத்தில் சந்தித்த போதே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணத்தில் வாள்வெட்டு, மணல் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட வன்முறைகளைக் கட்டுப்படுத்திய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை பழிவாங்கும் …

Read More »

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்களின் 134 மில்லியன் ரூபா வங்கி வைப்புக்கள் முடக்கம்

நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 134 மில்லியன் ரூபா வைப்புக்களைக் கொண்ட 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார. ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளே முடக்கப்பட்டுள்ளன. 134 மில்லியன் …

Read More »

பல்கலை மாணவர்கள் கொலை: பொலிஸ் சாட்சியின் தமிழ்மொழிப் பிரதியைக் கேட்டு விசாரணை ஜூன் 13 வரை ஒத்திவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் தொடரில் இன்று அரச தரப்புச் சாட்சியான பொலிஸ் அலுவலகர் சாட்சியம் வழங்க முற்படுத்தப்பட்ட போதும் அவரால் முன்வைக்கப்பட்ட பிரித்தெடுக்கப்பட்ட சாட்சியின் பிரதி சிங்களமொழி மட்டுமே காணப்பட்டதால் அதன் தமிழ்மொழிப் பிரதியை சமர்ப்பிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ். பீற்றர் போல், விசாரணையை வரும் ஜூன் 13ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!