உள்ளூர் செய்திகள்

நல்லூரில் வீதியில் சென்ற பெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு – பட்டபகலில் துணிகரம்

யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் சென்ற குடும்பப் பெண்ணிடம் 13 தங்கப் பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்துக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் தாலிக்கொடி அறுக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு கொள்ளையர்களால் தாலிக்கொடி இழுத்து அறுக்கப்பட்டதால் கழுத்துப்பகுதியில் படுகாயமடைந்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் – நாவலர் வீதியைச் சேர்ந்த சந்திரன் நிரஞ்சனா (வயது -40) என்பவரே கழுத்துப் பகுதியில் நெரி காயத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். …

Read More »

தனிமையிலிருந்த மூதாட்டி கொலை; தெல்லிப்பளையில் சம்பவம்

வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மூதாட்டியின் கழுத்தில் காணப்படும் அடையாளத்தை வைத்தே கழுத்து நெரித்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது என உறவினர்கள் தெரிவித்தனர் எனவும் கூறினர். தெல்லிப்பளை மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது -70) என்ற மூதாட்டியே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. மூதாட்டியின் வீட்டுக்கு இன்று காலை சென்ற உறவினர்கள், …

Read More »

பல்கலை. மாணவர்கள் இருவரையும் விடுவிப்பதா? கட்டளை புதனன்று

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் சார்பிலும் முன்வைக்கப்பட்ட பிணை  அல்லது வழக்கிலிலிருந்து அவர்களை விடுவிப்பதா? என்ற  கட்டளை நாளை மறுதினம் புதன்கிழமை வழங்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் அறிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன. அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் …

Read More »

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே நேற்றிரவு  கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். தனது முகநூலில் உள்ள படங்களை எடுத்து எவரோ ஒருவர் தனக்கு எதிராக இந்த வேலையைச் செய்துள்ளதார் என்று சந்தேகநபர் விசாரணையில் தெரிவித்துள்ளார். தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம்  அனுப்பிவைக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தத் தேசம் அல்லாவின் …

Read More »

கடும் சோதனைகளுக்கு மத்தியில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பம்

வடக்கில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இரண்டாம் தவணைப் பாடசாலை இன்று ஆரம்பித்தது. எனினும் மாணவர்களின் வரவு முழுமையாகவில்லை என்று பாடசாலைகளின் சமூகங்களால் தெரிவிக்கப்பட்டது. நாட்டில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து இரண்டாம் தவணைப் பாடசாலைகள் ஆரம்பிப்பதது பிற்போடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாடசாலைகளில் கடும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்றையதினம் மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் புத்தகப் பைகள் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இராணுவம், பொலிஸார் இணைந்து சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு சோதனைகளுக்கு …

Read More »

ஊடரங்கின் போது கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு அனுமதி – பொலிஸ் அறிவிப்பு

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊடரங்கால் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் செல்லும் பயணிகளின் போக்குவரத்துக்கு தடை போடப்படாது என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. விமானப் பற்றுச்சீட்டுக்களைக் காண்பித்து விமான நிலையங்களுக்குச் செல்வோர் பயணிக்க முடியும். வாகனங்களுக்கு ஊடரங்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. நீர்கொழும்பில் இன்று மாலை இரண்டு தரப்புகளுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கலவரமாக மாறியது. அதனால் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சிலவற்றுக்கு எரியூட்டப்பட்டது. இந்த மோதலையடுத்து அங்கு சிறப்பு அதிரடிப்படையினர், …

Read More »

இருவேறு தாக்குதல்களுடன் தொடர்புடைய மூவர் வாள்களுடன் கைது – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இரண்டு வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினரே கைது செய்தனர். மானிப்பாயில் ஏப்ரல் 10ஆம் திகதி முன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்தது. அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர் வாளுடன் மானிப்பாய் பொலிஸ் …

Read More »

நீர்கொழும்பில் பதற்றம்: ஊடரங்கு நடைமுறைக்கு வந்தது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாளைக் காலை 7 மணிவரை ஊடரங்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் இடம்பெற்றதையடுத்து அங்கு பதற்ற நிலை காணப்படுகிறது. அதனையடுத்து இந்த ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கு இடையிலான மோதலால் வீதியில் சில முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் எரியூட்டப்பட்டுள்ளன. சம்பவத்தையடுத்து பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

Read More »

குருநகரில் வீடொன்று முற்றுகை: குடு பக்கற்றுகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடொன்றை சோதனையிட்ட சிறப்பு அதிரடிப்படையினர் அங்கிருந்து 11 பக்கற்றுகள் குடு போதைப் பொருளை மீட்டனர். அதனை விற்பனை செய்யும் நோக்குடன் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “குருநகர், கடற்கரை வீதியில் அண்ணா சிலைக்கு அண்மையாக உள்ள வீடு இன்று மாலை தொடக்கம் இரவு 7.45 மணிவரை சிறப்பு அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு வீடு முழுவதும் சோதனையிடப்பட்டது. இதன்போதே அங்கு “குடு” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அந்த வீட்டில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக்க் கிடைத்த …

Read More »

கொக்குவில் இந்துவில் வாள் மீட்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று நடத்தப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், கொக்குவில் வராகி அம்மன் ஆலயப் பகுதியிலும் வாள் ஒன்று வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலைகளின மேல் பிரிவுகளை நாளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று பொலிஸாரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் கல்லூரியின் மண்டபம் ஒன்றில் மேல் மாடியில் …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!