உள்ளூர் செய்திகள்

சுன்னாகத்தில் ரௌடிகளால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் சாவு; உடுவிலில் பதற்றம் – பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு

சுன்னாகம் பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மதியம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பையடுத்து உறவினர்கள் உள்பட ஊரவர்கள் குழப்பமடைந்ததுடன், தாக்குதல் நடத்தியவர்களைப் பொலிஸார் கைது செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினர். சம்பவத்தில் உடுவில் அம்பலவாணர் வீதி, நாகம்மாள் லேனைச் சேர்ந்த நடேசு ரதீஸ்குமார் (வயது-25) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். குடும்பத்தலைவர் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் உடுவிலிருந்து சுன்னாகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். அவரை …

Read More »

மடு அன்னையின் திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் சோதனை நடத்தப்படும் – மன்னார் ஆயர் விளக்கம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மடு மாதா ஆலய ஆடி மாதத் திருவிழாவில் பங்கேற்க வரும் அனைத்து பக்தர்களும் சோதனைகளுக்கு உள்படுவார்கள் என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார். மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை மாலை 3.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இராணுவம், பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்கலாக 15 திணைக்களங்களின் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையையடுத்து பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்பட்டதோடு, மேலும் குடிதண்ணீர் வசதி, போக்குவரத்து, சுகாதாரம், …

Read More »

மாவடிச் சந்தியிலுள்ள வெற்றிலைக் கடை தீயில் எரிந்து நாசம்

வட்டுக்கோட்டை மாவடிச் சந்தியில் உள்ள வெற்றிலைக் கடை நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியது. இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது. மாவடிச் சந்தியில் வெற்றிலை வியாபாரம் இடம்பெறும் பெட்டிக்கடையே இவ்வாறு தீப் பற்றி எரிந்தது. மின்னிணைப்பு அற்ற அந்தப் பெட்டிக் கடைக்கு விசமிகளால் தீவைக்கப்பட்டதா அல்லது கடைக்குள் தீ விபத்து இடம்பெற்றதாக என்ற தகவல் கிடைக்கவில்லை.

Read More »

சட்டவிரோதமாக வெட்டிய 97 கிலோ மாட்டிறைச்சியுடன் குருநகரில் ஒருவர் கைது

அனுமதி பெறப்படாமல் மாட்டிறைச்சி வெட்டியமை மற்றும் அதனை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை பிணையில் விடுத்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபரிடம் மீட்கப்பட்ட 97 கிலோ கிராம் இறைச்சியை தீயிட்டு அழிக்குமாறு உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சியைக் கொண்டு சென்ற நாவந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர சபை பொதுச் சுகாதாரத் துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான 97 கிலோ கிராம் மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது. …

Read More »

தவ்ஹீத் ஜமாத் எனக் கூறி பிக்குவிடம் 100 மில்லியன் ரூபா கப்பம் கோரிய மூவரும் விளக்கமறியலில்

தம்மைத் தீவிரவாத தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் முக்கியஸ்தர்கள் என அச்சுறுத்தி, தம்புள்ள ரஜமகா விகாரை மற்றும் அதன் பொறுப்பதிகாரி ராகுல தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிங்கள சமூகத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு பௌத்த துறவியை கடந்த சில தினங்களாக அச்சுறுத்தி வந்துள்ளனர். அவர்கள் பணம் பறிக்க முயன்றுள்ளதுடன் அவரைக் கொலை செய்யப் போவதாகவும் மிரட்டி வந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் …

Read More »

பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழை இணையத்தில் பெற வசதி

கல்விப் பொதுதராதர உயர் தரம், சாதாரண தரம் உள்ளிட்ட அனைத்துப் பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்களை இணையதளம் ஊடாகப் பெற்றுக் கொள்ளவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித் அறிவித்துள்ளார். இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் கல்விப் பொதுதராதர உயர் தரம், சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்களை பிரதான தபாலகங்களில் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக பரீட்சைகள் திணைக்களமும் தபால் திணைக்களமும் செய்து கொண்ட உடன்படிக்கை தொடர்பான வெளியீடு நாளைமறுதினம் செவ்வாய்கிழமை கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது. அதற்கு மேலதிகமாக இணையத்திலும் பெறுபேற்றுச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான …

Read More »

மிதிபலகை உடைந்து வீழ்ந்ததால் நடத்துனர், பயணி உயிரிழப்பு

பேருந்தின் முன்பக்க மிதிபலகை கழன்று வீழ்ந்ததின் அதில் பயணித்த பயணி ஒருவரும் நடத்துனரும் முன் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் கடகன்னாவ பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்றது. கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் மிதிபலகை கடுகன்னாவையில் கழன்று வீழ்ந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்மாந்துறையை சேர்ந்த சேகர் என்ற நடத்துனரும் பயணி ஒருவருமே சம்பவத்தில் உயிரிழந்தனர் என்றும் பொலிஸார் கூறினர்.

Read More »

காற்றுடன் கூடிய காலநிலை தொடரும் – யாழ்ப்பாணத்தில் மணிக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாள்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. “யாழ்ப்பாண மாவட்டத்திலும் பொத்துவில் பிரதேசத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. களுத்துறை, காலி, மாத்தறை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 75 …

Read More »

குருநகர் வீடொன்றில் வெடிபொருள் வெடித்து ஒருவர் படுகாயம்

கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குருநகர் பற்றிக் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றாக பொலிஸார் தெரிவித்தனர். “அந்த வீட்டில் தனிமையில் வசித்து வருபவர் டைனமற் வெடிபொருளைத் தயாரிக்கும் போது அது வெடித்துள்ளது. சம்பவத்தில் அவர் படுகாயமடைந்தார். சம்பவத்தையடுத்து அயலவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். அத்துடன், பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More »

நவாலியில் வாள் வெட்டு – மாணவன் படுகாயம்.

நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். அண்ணனை இலக்கு வைத்துத் தாக்குவதற்கு வந்த கும்பல் 16 வயது மாணவனான தம்பியை வாளால் வெட்டிக்காயப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. தலையில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் இன்றிரவு 10 மணியளவில் நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் இடம்பெற்றது. முகத்தை மூடியவாறு வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வீடு புகுந்த கும்பல், அடாவடியில் ஈடுபட்டதுடன், மாணவனை …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!