சிறப்புக் கட்டுரைகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்கள் ஆள்சேர்ப்பில் நடப்பது என்ன? ஒரு அலசல்! பாகம் 2

நரசிம்மன் 2018 ஆம் ஆண்டு உயர்கல்வி அமைச்சர்களாக விஜயதாச ராஜபக்சவும் கபீர் காசிமும் இருந்த போது இரண்டு தடவைகள் உயர்கல்வி அமைச்சிடமிருந்து 876 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக வெற்றிடங்களை நிரப்புவதற்கான பட்டியல்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் முதற் பட்டியலிலும் பெரும்பான்மையாக நடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனினால் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களே இடம்பெற்றிருந்தன, அடுத்த பட்டியலில் மாவை. சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் சார்பில் அவர்களுடன் பணியாற்றிய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் அனுப்பப்பட்ட …

Read More »

யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனைசாரா ஆட்சேர்ப்பில் நடப்பது என்ன? ஓர் அலசல்! பாகம் – 1

நரசிம்மன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் போதனைசாரா ஊழியர்களின் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் பாதிக்ப்பட்டிருப்பதாகக் கூறி, யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் களமிறக்கப்பட்ட ஒரு சாரார் தவணை முறையில் உணவொறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உணவொறுப்புப் போராட்டம் வெற்றியைத் தருமா? என்கிற பார்வையில் இந்த பத்தி ஆராய முனைகிறது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும் உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் குறிப்பிட்ட சில போதனைசாரா பதவி நிலைகளுக்கு உயர் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படும் பட்டியல் மூலமாகவே ஆள்சேர்ப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என …

Read More »

அச்சத்தில் யாழ்.குடாநாட்டு மக்கள் – உறக்கத்தில் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டு வன்முறைகள், வழிப்பறிக் கொள்ளைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பொலிஸார் தவறியுள்ளனர். பொலிஸாரின் தூங்கு நிலையால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளில் மக்கள் அச்சத்துடனேயே இரவுப் பொழுதுகளைக் கழிக்கின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கடந்த 31ஆம் திகதி நிறைவடைந்தது. நல்லூர் ஆலய திருவிழாவில் 600 பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். அதனால் பொலிஸ் நிலையங்களில் பொலிஸாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் செப்ரெம்பர் முதலாம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் யாழ்ப்பாணம், மானிப்பாய், …

Read More »

இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா? – ரொய்ட்டர்ஸ் ஆய்வு

250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க முடியாத அரசின் இயலாமையினால், கோபமடைந்த இலங்கையர்கள், தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து, பொருளாதார வளர்ச்சியை மீண்டும் கொண்டு வரக்கூடிய, வலிமைமிக்க ஒருவர் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை விரும்புகிறார்கள். போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள போதிலும், கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பலர் வேரூன்றியுள்ளனர். தமிழ்ப் புலிகளை தோற்கடித்ததன் மூலம், சிங்கள பௌத்த பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை தமிழ் குழுக்களுக்கு இடையிலான, 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை, மிருகத்தனமான முறையில், முடிவுக்குக் கொண்டு வந்த, ராஜபக்ச சகோதரர்களான …

Read More »

தெல்லிப்பளையில் கதிர்வீச்சு கழிவுகளா? – மருத்துவ ஆய்வு

அண்மைக் காலத்தில் வடமாகாணத்தின் தெல்லிப்பளை வைத்தியசாலையில் இலங்கையின் பிற மாவட்டங்களில் உள்ள குறிப்பாக அநுராதபுரம் மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து மனிதக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவதாகவும் அதனால் அப்பிரதேசத்தில் பெரும் சுகாதாரச் சீர்கேடு உருவாகலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டு வருகின்றது. தேர்தல் காலம் நெருங்குவதால் அரசியல்வாதிகள் பலர் தமது அறிவுக்கு எட்டிய வகையில் அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். உண்மையில் என்னதான் நடக்கின்றது என்பதை இப்பத்தி ஆராய்கின்றது. வைத்தியசாலைக் கழிவுகள் பற்றி ஏன் நாம் அதீத அக்கறை கொள்ளவேண்டும் …

Read More »

கறுப்பு ஜூலை : 36 ஆண்டுகள் போனாலும் ஆறாத வடுக்கள்

இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 36 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள். தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி கலகக்கரார்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் …

Read More »

பொலிஸாரின் அதிகார துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு; 20 வழிகாட்டல்களை வழங்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இலங்கையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகளான பொலிஸார், முறைகேடு செய்வது அதிகரித்து வருவதை அவதானிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள உயர் நீதிமன்றம், பொலிஸ் மா அதிபருக்கு பொது மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் 20 வழிகாட்டல்களை வழங்கியள்ளது. சிறுமி ஒருவரை சட்டத்துக்குப் புறம்பாகக் கைது செய்து தடுத்துவைத்தமையை பொலிஸாரின் அடிப்படை உரிமை மீறல் எனத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், அந்தச் சிறுமிக்கு அரசு மற்றும் பொலிஸார் இழப்பீட்டை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அரசியலமைப்பின் 11, 12(1),13(1) மற்றும் 13(2) ஆகிய உறுப்புரைகளால் உறுதிசெய்யப்பட்டுள்ள லண்டாகே இஷாரா அஞ்சலி …

Read More »

எமது சமூகம் ஆரோக்கியமாக வாழ இயற்கை விவசாயம் அவசியம் – அருட்தந்தை லிங்கேஸ்வரன் செவ்வி

மீண்டும் பழமையைக் கொண்டுவரவேண்டும், இன்றுள்ள சந்ததியும் எதிர்கால சந்ததியும் நீண்ட ஆயுளுடன் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற நோக்கத்தினால் இயற்கை விவசாயத்தை வீட்டுத்தோட்டமாக செய்துவருகின்றேன் என்கிறார் அருட்தந்தை ஜோண் லிங்கேஸ்வரன் வீட்டுக் காணியில் இயற்கை விவசாயம் செய்து தனது குடும்பத்தினருக்கு மாத்திரமின்றி உறவினர்கள் – அயலவர்கள் என தன்னைச் சூழவுள்ள சமூகம் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்படுகின்றார் உடுவில் மகளிர் கல்லுரியின் ஆசிரியரான அருட்தந்தை சேமநாதன் ஜோண் லிங்கேஸ்வரன். காணொளியைத் தவறவிடாதீர்கள் தனது தந்தையுடன் இணைந்து கடந்த 3 வருடகாலமாக இயற்கை விவசாயம் …

Read More »

யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாறு

பிரதம நூலகர் எஸ். சுகந்தினியால் தொகுக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம் பற்றிய வரலாற்றுத் தொகுப்பு இது 1933ஆம் ஆண்டில் மு.ஆ.செல்லப்பா என்ற பரோபகாரி தனது வீட்டில் ஒரு அறையை ஒதுக்கி சில பத்திரிகைகளையும் புத்தகங்களையும் தாமே வாங்கி வைத்து விரும்பியோர் யாரும் வந்து படிக்கலாம் என்று ஏற்பாடுசெய்தார். இதனை பலர் பயன்படுத்தத் தொடங்கினர். அந்நாளில் அவர் யாழ்ப்பாண மாவட்ட மன்றில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இந்த அரிய சிந்தனை எழ நீதிமன்றச் செயலர் கு.ஊ.கிறீனியரும், 1848ல் யாழ்ப்பாண அரச அதிபராக இருந்த சேர் …

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் நிறுத்திய பிரிட்டன் கண்காட்சி

இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த மே 18ஆம் திகதியன்று தாயகத்தில் மட்டுமின்றி, பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் அங்கு வாழும் புலம் பெயர் ஈழத் தமிழர்களால் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அந்த வகையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில், ‘இலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கண்காட்சியில் இலங்கை உருவானது முதல் தமிழ் கலாசாரத்தின் தொன்மை வரையும், உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதல் இறுதி வரையும் …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!