சிறப்புக் கட்டுரைகள்

நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டப்படி செல்லுமா?

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை இலங்கையின் பிரதமராக, ஜனாதிபதி மைத்திரிபால நியமித்ததை அடுத்து அரசில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், நவம்பர் 9ஆம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 2019 ஜனவரி 5ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி வெளியிடுள்ள வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உயர் நீதிமன்றத்தின் கருத்தை கேட்காமல் தேர்தலை நடத்த முடியாது என சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனவரி 5ஆம் …

Read More »

யாழ்ப்பாணக் கல்லூரி ஆளுநர் சபையினரால் தர்மகர்த்தா சபைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரிக்க அமெரிக்க நீதிமன்றம் தீர்மானம்

யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவரும், உப தலைவரும் பதவி விலகாவிடின் யாழ்ப்பாணக் கல்லூரி நிதியத்தின் தர்மகர்த்தா சபையினர் கல்லூரிக்கு வழங்கும் நிதியினை எதிர்வரும் ஜனவரியில் இருந்து முற்றாக நிறுத்தப் போவதாக எடுத்த முடிவுக்கு எதிராக யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையினர் அமெரிக்காவின் மசசூசஸ்ட் மாநிலத்திலே இருக்கும் நோஃபோக் குடும்ப மற்றும் விருப்புறுதி நீதிமன்றிலே தாக்கல் செய்த வழக்கினை விசாரிப்பதற்கு அந்த நீதிமன்றம் இணங்கி உள்ளது. “தாம் ஒரு தர்ம நிறுவனம் என்ற வகையில் தமது பொறுப்புக்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு மசசூசட்ஸின் சட்டமா அதிபரின் …

Read More »

“குள்ளமனிதர்கள்” வட்டுக்கோட்டை – அராலியில் நடப்பவை என்ன?

வட்டுக்கோட்டை, அராலி மற்றும் சங்கரத்தைப் பகுதிகளில் அண்மைய நாள்களில் இடம்பெறும் சம்பவங்கள் மக்களைப் பீதிக்குள்ளாக்கியுள்ளன. ஊர் அடங்கும் நேரத்தில் வீடுகளுக்குள் நுழைந்து கதவைத் தட்டுவது, கற்களை எறிவது என சிலரால் நடத்தப்படும் அடாவடிகளே இந்தப் பீதிக்கு உள்ளாக்கியுள்ளன. இதன் பின்னணியில் இராணுவம் உள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளார் எனவும் குற்றச்சாட்டப்படுகின்றன. அராலி மேற்குப் பகுதியிலுள்ள  வீடொன்றின் வேலிக்கு நேற்று (2) வியாழக்கிழமை நள்ளிரவு விசமிகள் தீமூட்டி நாசமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு …

Read More »

வாய்ப்பு நம்மைத் தவறவிட்டால் துரதிர்ஷ்டம்; வாய்ப்பை நாம் தவறாவிட்டால் அது..?? திமிர்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்றோடு முடிவடைந்தது. பிரான்ஸ், குரோஷியா அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த தருணத்தில் குரோஷிய அணியைப் பற்றிய ஒரு சிறிய தகவலை தெரிந்துகொள்வது அவசியம். ‘வாய்ப்பு’ என்ற சொக்கத் தங்கத்தை ‘ஈகோ’ என்ற உரைகல்லில் உரைத்துப் பார்த்து ‘இது பித்தளை’ என்று தூக்கியெறிந்த ஒருவரின் தவறான முடிவால், சரித்திரத்தில் தன் பெயரை பதிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் குரோஷிய வீரர் நிக்கோலா காலிநிக். குரோஷிய அணி உலக கோப்பை போட்டிக்குள் நுழைந்ததற்கு காரணமான முன்னணி …

Read More »

சிறுமிகளை துன்புறுத்திய ஆசிரியர் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

வட்டுக்கோட்டை ஆசிரியர், தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த மாணவிகளை வன்புணர்வுக்குட்படுத்தவில்லை, பாலியல் ரீதியான தொல்லைகளையே வழங்கினார் என்ற ரீதியில் மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனால் அது பாரதூரமான குற்றச்சாட்டு இல்லை என்ற கருத்து தற்போது சட்டத்துறை சார்ந்தவர்களாலும் ஆசிரியர் சார்ந்த தரப்புகளாலும் புதிய கதை ஒன்று பரப்பப்பட்டுள்ளது. கல்வி பயிலவரும் மாணவியை – சிறுமியை நல்லொழுக்கத்துடன் வளர்த்தெடுப்பதே ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும். அதனை நம்பியே ஒவ்வொரு பிள்ளையையும் அவர்களது பெற்றோர் கல்வி பயில அனுப்புகின்றனர். நூற்றுக்கு 95 சதவீத ஆசிரியர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாகம் மாணவர்களுக்கு போதனைகளை …

Read More »

யாழ். பல்கலையில் முதன்முறையாக பொறியியலாளர்கள் உருவாகினர் – பேராசிரியர் துரைராசாவின் கனவு நனவாகியது

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திலிருந்து முதல் தொகுதிப் பொறியியலாளர்கள் நாளை பட்டம் பெறுகின்றனர். பொறியியல் துறையில் உலகம் போற்றும் :”துரை விதியை” அறிமுகப்படுத்திய மாமனிதர் பேராசிரியர் அ. துரைராஜா அவர்களின் கனவு இப்போது நனவாகியிருக்கின்றது. இது வரை காலமும் தமிழர் தாயகத்திலிருந்து பொறியியல் பீடத்துக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகம், மொறட்டுவ பல்கலைக்கழகம், ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், றுகுண பல்கலைக்கழகம், ஆகியவற்றில் சென்று பட்டம் பெற்று வந்தனர். முதன் முதலாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தமிழ் மண்ணிலிருந்து பொறியியலாளர்களாக உருவாகியிருக்கின்றனர். நாளை, …

Read More »

கனவு இன்னும் கனவாகவே நீடிக்கின்ற சோகத்தில் முடங்கிக் கிடக்கும் இவர்களை மீட்டெடுப்பது எப்படி?

அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் புத்தாண்டுக்கு முன்னர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படுவார் எனக் கூறப்பட்ட விடயத்தில் ஏமாற்றமடைந்தவர்கள் அவரின் இரண்டு பிள்ளைகள்தான். கிளிநொச்சியில் கடந்த மார்ச் 18ஆம் திகதி நடைபெற்ற தனது மனைவியின் இறுதிச் சடங்குக்காக ஆனந்தசுதாகர் வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டார். மனைவிக்கு இறுதிக்கிரியை செய்ய அவருக்கு 3 மணி நேரமே அனுமதி வழங்கப்பட்டது. அதனால் வீட்டில் நடந்த கிரியைகளுடன் அவர் மீள அழைத்துச் செல்லப்பட்டார். தந்தையை மீளவும் சிறைக்கு அழைத்துச் செல்வதை மனதளவில்கூட அனுமதிக்க தயங்கிய ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா, …

Read More »

போருக்குப் பின் பெண் போராளிகள் பெரும் நெருக்கடிக்குள்!

  காயத்திரி தனது வாழ்வு தொடர்பாக அதிருப்தியடைந்திருந்தார். இவர் தன்னைத் தானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வதற்காக இணையத்தளத்தில் ‘உன்னத தலைவர்களால்’ ஆற்றப்பட்ட உரைகளைப் பார்ப்பதெனத் தீர்மானித்தார். ஆனால் இணையத்தளமும் செயற்படவில்லை. இது இவருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காயத்திரி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார். வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்டு தலைமை தாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சுதந்திர தமிழீழத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் அரசுக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டது. இந்தப் போரானது தமிழீழ விடுதலைப் …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!