டவுட் வாணர்

38 ஆண்டுகளுக்கு பிறகு உயர்தர தேர்வு எழுதவுள்ள இராஜாங்க அமைச்சர் ரஞ்சன்

கல்வி கற்பதற்கு வயது கிடையாது என பலரும் கூறிய வருவதையும், பல முதியவர்கள் இன்றும் கல்வி பயின்று வருவதையும் நாம் வாழும் சமூகத்தில் நாள்தோறும் பார்த்து வருகின்றோம். சிறு வயது முதல் முதுமைஅடையும் வரை பலர் இன்றும் கல்வி பயின்று வருகின்றனர். இலங்கையை பொறுத்தவரை, தனிநபர் ஒருவர் கல்வி பொதுதராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர தேர்வுகளை எழுதுவது அத்தியாவசியமாகும். உயர்தர தேர்வில் வெற்றிபெறும் ஒருவரே, சிறந்த தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இலங்கையில் நிலவுகிறது. இந்நிலையில், முதல் தடவையாக 1981ஆம் ஆண்டு உயர்தர தேர்வு …

Read More »

யாழ். மாநகர சபையுடன் முட்டிமோதும் கேபிள் ரிவி நிறுவனத்துக்கு ஊடக அமைச்சின் உரிமம் இல்லை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறப்படும் தொலைக்காட்சி அலைவரிசை இணைப்பு (Cable TV) நிறுவனத்துக்கு கேபிள் இணைப்பு வழங்குவதற்கான உரிமம் வழங்கப்படவில்லை என ஊடகத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உள்ள அரசியல் கட்சி உறவை வைத்துக்கொண்டு அவரது கட்டுப்பாட்டின் கீழ் வரும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் கேபிள் ரிவி நடாத்துவதற்கான உரிமத்தைப் பெற்றுக்கொண்டு இந்த அந்த நிறுவனம் சேவையில் ஈடுபடுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த …

Read More »

தமிழ் மக்களின் போராட்டத்தை சிங்கள ஊடகங்களில் விமர்சித்து வரும் அருண் யார்?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவரையும் தமிழ் மக்களின் போராட்டத்தையும் விமர்சித்து அருளானந்தம் அருண், போதைப்பொருள் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டு வழக்குகளில் நீதிமன்றங்களில் முன்னிலையாகமல் ஒளிந்துள்ளார் என்று அறியமுடிகின்றது. தன்னை பௌத்த மத விரும்பும் நபராக தென்னிலங்கை ஊடகங்களில் வெளிப்படுத்தும் அவர், சிங்கள ஊடகங்களில் ஒளிபரப்பாகும் நேரலை விவாத நிகழ்வுகளில் பங்கேற்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவரையும் விமர்சித்து வருகிறார். அத்துடன், சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடும் குற்றச்சாட்டில் …

Read More »

கிளிநொச்சி போராட்டத்தில் குழப்பம் விளைவிக்க முன்னரே திட்டமிடப்பட்டதா?

கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட கறுப்பு சட்டை அணிந்தோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுடன் கூடி கதைக்கும் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்றைய தினம் கிளிநொச்சியில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கறுப்பு சட்டை அணிந்து வந்த சிலர் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் , யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டனர். மேலும் ஒலிபெருக்கி சாதனத்தின் வயர்களை பிடுங்கி வீசியும் , ஊடகவியலாளர்கள்  போராட்டத்தில் …

Read More »

“வன்முறையைத் தவிர்ப்போம், போதையை ஒழிப்போம்” என உருவாக்கப்பட்ட அமைப்பு எங்கே?

“வன்முறையைத் தவிர்ப்போம், போதையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் வடகிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பு கடந்த ஆண்டு மே 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 9 மாதங்கள் கடந்த நிலையில் அதன் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதே கண்கூடு. யாழ்ப்பாணம் உள்பட தமிழர் தாயகத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை – கடத்தல் மற்றும் வாள்வெட்டு வன்முறைகளை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் குறிப்பாக தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களால் இந்த அமைப்பு ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாண மத்திய …

Read More »

வடக்கு ஆளுநரின் கொள்கைக்கு எதிர்மாறாக அவரது அதிகாரி செயற்படுகிறாரா?

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் மொழிக்கொள்கைக்கு எதிர்மாறாக அவரது மக்கள் தொடர்பு அதிகாரி செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கடந்த ஜனவரி 9ஆம் திகதி யாழ்ப்பாண அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற கையுடன், வடக்கு மாகாண அரச நிறுவனங்களில் மும்மொழிக்கொள்கை வரும் ஏப்ரல் 9ஆம் திகதிக்கு முன்னர் சீரமைக்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன், வடமாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் …

Read More »

உஷார்! உஷார்!! இளையோரிடம் நுட்பமாகப் பணம் பறிக்கும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் நடக்கிறது

யாழ்ப்பாணத்தில் இளையோரிடம் நுட்பமாக பணம் பறிக்கும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது. வங்கிகளில் வேலை பெற்றுத் தருவதாக இந்த மோசடி இடம்பெறுகிறது. எனினும் பெரியளவில் பணத்தை கோராமல் குறிகிய தொகையை அவர்கள் கோருவதால் இந்தச் சம்பவம்கள் வெளியே வருவதில்லை. இதில் இந்த வாரம் நடைபெற்ற சம்பவம் தொடர்பில்  தெரியவருவதாவது: இளவாளைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு தொலைபேசி ஊடாக அழைத்த ஒருவர், அங்கு க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடித்து பல்கலைக்கழக அனுமதிக்காக உள்ளவர்கள் இருந்தால் கொமர்ஷல் வங்கியில் பயிலுனர் சேவைக்கு வெற்றிடம் உள்ளது, யாழ்ப்பாணத்துக்கு …

Read More »

கஞ்சா கடத்தலில் சந்தேகநபர்களை விடுவிக்க பொலிஸாருக்கு அழுத்தம் – விளக்கமளிப்பாரா ஜனாதிபதி சட்டத்தரணி?

சமூக ஊடகங்களில் இன்று பரவலாக பேசப்படும் விடயமாக சண்டே ரைம்ஸ் ஆங்கில வார ஏட்டில் வெளியாகிய பத்தி எழுத்தாக அமைந்துள்ளது. கஞ்சா போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பொலிஸாரைத் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் தமது கட்சி ஆதரவாளர்கள் என்று தெரிவித்து அவர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸாருக்கு கட்டளையிட்டார் என்ற விடயமே அந்தப் பத்தி எழுத்தில் வெளியிடப்பட்டிருந்தது. வடக்கில் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிக்க இயங்கும் பொலிஸ் பிரிவுகளில் ஒன்றான கிளிநொச்சி பிரதிப் பொலிஸ் மா …

Read More »

யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாளர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை – பின்னணி என்ன?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் அதிதிறன் அலைபேசியைப் பயன்படுத்த வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தடைவிதித்துள்ளார். இதுதொடர்பில் அவர் உள்ளக சுற்றறிக்கை ஒன்றை அனைத்துப் பிரிவுகளுக்கும் அனுப்பிவைத்துள்ளார். இன்று டிசெம்பர் முதலாம் திகதி தொடக்கம் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணியாளர்கள் கடமை நேரத்தில் அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்ற நடைமுறை ஏற்கனவே உள்ளது. எனினும் அது சீராக நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக நோயாளர்கள் மத்தியில் அலைபேசிப் பயன்பாட்டுக்கு வைத்தியசாலைகளில் …

Read More »

திருமலை நீதிமன்றுக்கு பெரும் பட்டாளத்துடன் வந்த வன்னியூர் செந்தூரன்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகியின் உயிரிப்புத் தொடர்பான இறப்பு விசாரணை திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவரது கணவர் வன்னியூர் செந்தூரன், சுமார் 40 பேருடன் நீதிமன்றுக்கு சமூகமளித்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். விரிவுரையாளர் போதநாயகியின் உயிரிழப்புடன் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அத்துடன், வன்னியூர் செந்தூரன் தலைமறைவாகிவிட்டார் என்று செய்திகள் வெளியிடப்பட்ட நிலையில் உறவினர்கள், நண்பர்களுடன் அவர் இன்று திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தோன்றினார். கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரான வவுனியா, …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!