மக்கள் முகம் (வீடியோ)

கட்டுவன் – மயிலிட்டி வீதி – கட்டுவன் சங்கனை வீதிகளை சீரமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பலாலி விமான நிலையம் செல்வதற்கான பிரதான வீதியாக  வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான ( RDA)  தெல்லிப்பளையில் இருந்து கட்டுவன் –  மயிலிட்டி வீதியும்,  கட்டுவன் சந்தியிலிருந்து-மல்லாகம் -சங்கானை வீதி ஆகிய வீதிகள்  கடுமையாக சேதமடைந்து குன்றும் குழியுமான நிலையில் உள்ளன. இந்த வீதிகளைத் திருத்துவதற்கான அளவீட்டுப் பணிகள் முடிவடைந்த நிலையில் இதுவரை சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் பாடசாலைகள் அந்த வீதிகளில் உள்ளன. கட்டுவன், மயிலிட்டி குரும்பசிட்டி ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள்  மீள்குடியமர்ந்தனர்.   மழை …

Read More »

சாவகச்சேரி வைத்தியசாலை அத்தியட்சகரே! இது உங்களின் கவனத்துக்கு!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் சிலர், தமது சேவையை மறந்து செயற்படுவதுடன், நோயாளிகளுடன் அடாவடியாக நடந்து கொள்கின்றனர். புத்தூர்ப் பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று (ஓகஸ்ட் 11) இரவு புகுந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று குடும்பத்தலைவரை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது. சம்பவத்தில் படுகாயமடைந்த பா.சிவகுமார் (வயது-43) என்ற குடும்பத்தலைவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்கான சிகிச்சைகள் இடம்பெறும் போது சுகாதார ஊழியர் ஒருவர், “குடித்துவிட்டு வெறியில் இருக்கிறாய்” என்று மிரட்டியுள்ளார். அத்துடன், கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தர்களும் …

Read More »

வடக்கு ஆளுநர் சொல்வது ஒன்று செய்வது வேறொன்றா? – தாதிய உத்தியோகத்தர்கள் பதவி உயர்வில் ஒருவருக்கு சிறப்பு அனுமதி

வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்களில் மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 26 தாதிய உத்தியோகத்தர்களில் ஒழுக்காற்று விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஒருவரை வடக்கு மாகாண ஆளுநர் தனது சிறப்பு அனுமதியின் மூலம் பரிந்துரைத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. “அனுமதி பெறாது இரண்டு தடவைகள் வெளிநாடு சென்று வந்த குற்றச்சாட்டுக்குள்ளாகி ஒழுக்காற்று விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட ஒருவரை அவரது கணவர் மருத்துவர் என்ற அடிப்படையில் பதவி உயர்வுக்கு வடக்கு மாகாண ஆளுநர் பரிந்துரைத்திருப்பது மற்றொரு உத்தியோகத்தரைப் பாதிக்கும் நடவடிக்கையாகும். வினைத்திறன் மிக்க அரச நிர்வாகத்தை முன்னெடுப்பதாகக் கூறிவரும் …

Read More »

சிற்றுண்டிச் சாலைகள் மீது சுகாதாரத் துறை அக்கறை செலுத்தாது ஏன்?

அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளில் இயங்கும் சிற்றுண்டிச் சாலைகளில் இடம்பெறும் சுகாதாரச் சீர்கேடுகள் தொடர்பில் பொதுச் சுகாதாரத் துறையினர் அக்கறை செலுத்துவதில்லை. குறிப்பாக சிற்றுண்டிச்சாலை பணியாளர்கள் மருத்துவச் சான்றிதழ் பெற்றுள்ளனரா, நடத்துனர்களிடம் மருத்துவச் சான்றிதழ் உள்ளதா? உள்ளிட்ட விடயங்களில் பொதுச் சுகாதாரத் துறையினர் அக்கறை செலுத்துவதில்லை. சில அரச நிறுவனங்களில் அங்கு பணியாற்றுபவர்களிடமே சிற்றுண்டிச்சாலையை நடத்தும் உரிமையை திணைகளத் தலைவர்கள்  வழங்குகின்றனர். அவ்வாறான சிற்றுண்டிச் சாலைகளில் பொதுச் சுகாதாரத் துறையினர் தலையீடு செய்ய விரும்புவதில்லை என்ற நிலையும் காணப்படுகின்றது. நீதிமன்றங்களில் இயங்கும் சிற்றுண்டிச் சாலைகளை …

Read More »

ரயில்களில் நடக்கும் கலாசார பிறழ்வுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கிளிநொச்சியில் இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்குச் சென்று யாழ்ப்பாணம் திரும்பும் மாணவர்கள் சிலர் தொடருந்தில் நடந்துகொள்ளும் விதம் பயணிகளுக்கு முகம் சுழிக்க வைக்கிறது. கிளிநொச்சியில் இயங்கும் இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இளையோருக்கு பல்வேறு தொழில் தகமைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவற்றை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். கொழும்பிலிருந்து காலையில் புறப்பட்டு பிற்பகல் வேளை யாழ்ப்பாணத்திற்கு வரும் தொடருந்தில் கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் யாழ்ப்பாணம் மாணவர்கள் வகுப்புக்கள் நிறைவடைந்து வீடு திரும்புவர். இந்த சேவை தொடருந்தில் பெரும்பாலும் அதிகளவான ஆசனங்கள் வெற்றிடமாகக் …

Read More »

யாழ். மத்திய பஸ் நிலைய பொது மலசல கூடம் இரவில் மூடப்படுவது ஏன்? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மாநகரத்தில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் சீரமைக்கப்பட்ட பொது மலசல கூடம் மக்களின் தேவைக்கானதா அல்லது தனிப்பட்ட தேவைக்கானதா? யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசல கூடம் தினமும் இரவு வேளைகளில் மூடப்படுகிறது. இதனால் வெளி மாகாணங்களிலிருந்து வருவோர் உள்பட பலர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இந்தப் பொது மலசல கூடம் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சால் ஒரு கோடியே 2 லட்சத்து 11 ஆயிரத்து 300 ரூபா …

Read More »

ஏற்றும் குருதிக்கும் மாற்றும் கிட்னிக்கும் முன்னுக்கு வராத சாதி

சாதி சொல்லித் தள்ளிவைக்கும் சுவாமி எது? ஒரு குரங்கைக் கண்டு அதுவும் கடவுளின் வாகனம் என்று பெருமை கொள்ளும் சைவ சமயத்தவர் நாங்கள். கடவுளைத் தொழுதோம். சந்தணம் வைத்தோம். குங்குமமும் வைத்தோம். அரோகரா சொல்லி ஆண்டவனையும் வணங்கினோம். இங்கேதான்! கீழ் சாதி என சகமனிதர்களையும் கண்டோம். மேல் சாதி நாங்கள் என பெருமையும் கொண்டோம். அண்மையில் வரணி அம்மன் ஆலயம் ஒன்றில் சம உரிமை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அறிவீர்கள். சிறுபான்மைத் தமிழன் பெரும்பான்மையோடு போராடியும் இன்னும் இவர்களின் புத்திக்கு புரிதல் வந்து …

Read More »

தூங்கும் வான் சாரதிகளின் கைகளில் பயணிகளின் உயிர்

தொடரும் வாகன விபத்து, கொழும்பிற்கு யாழ்ப்பாணத்திற்கும் இடையில் மாறி மாறி பயணிக்கும் பயணிகளின் உயிர், தூங்கும் சாரதிகளின் கைகளில். இதில் கூடுதலாக அகப்பட்டோர் புலம்பெயர்ந்த நம் உறவுகள். விடுமுறையில் உறவினர்களை பார்க்க வந்து உயிரை இழந்து சென்றவர்களும் கை, கால் முறிந்து சென்றவர்களும் என துன்பங்களில் முடிந்ததாக அமைந்தது அவர்களின் பயணங்கள். 2009 இல் போர் முடிவடைந்த காலப்பகுதியில் இருந்து இன்று பத்து வருடம் ஆகிறது. பல விழிப்புணர்வுகள் செய்தும் இன்று வரை இந்த விபத்துகள் முடிவுக்கு வந்ததாக இல்லை. இடம்பெற்ற இவாறான விபத்துக்களில் …

Read More »

சுத்தமான யாழ். மாநகரை உருவாக்குவாரா முதல்வர் ஆனல்ட்

யாழ்ப்பாணம் மாநகரில் கழிவகற்றலில் ஈடுபடும் ஊழவு இயந்திரங்கள் மக்கள் நடமாட்டம் அதிகரித்த வேளையில் நகர வீதிகளில் பயணிப்பதால் பொது மக்களுக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக உழவு இயந்திரங்களிலிருந்து சிந்தும் கழிவு நீர் மற்றும் குப்பைகள் நகரில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதால் பொது மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். சுத்தமான நகரம் என்ற கொள்கைகளுடன் பதவிக்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் இந்த விடயத்தில் கவனமெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களால் கோரிக்கை விடப்படுகிறது. யாழ்ப்பாணம் மாநகர கழிவகற்றல் உழவு இயந்திரம் …

Read More »

6 மாதம் தடுப்பிலிருந்து விடுதலையான போராளி உதவி கோருகிறார்

பாறுக் ஷிஹான் எனது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உதவி செய்யும் நல்லுள்ளங்கள் எனக்கு உதவுங்கள் என வவுணதீவு பொலிஸாரின் படுகொலையில் சந்தேகநபராக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட கதிர்காமத்தம்பி இராசகுமாரன் என்றழைக்கப்படும் அஜந்தன்(வயது-40) கேட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரது வீட்டிற்கு சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் மேற்கண்டவாறு கூறியதுடன் பொருளாதாரம் மிக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதங்கத்தை தெரிவித்து உதவுமாறு கேட்டுக்கொண்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எனக்கு நடந்தது போன்று இனி எவருக்கும் நடக்கக் கூடாது .சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்கள் நிலமை இப்படியாகிவிடக் கூடாது …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!