வணிகம்

மாதகல் வர்த்தகருக்கு சுமார் 10 கோடி ரூபாவை மோசடியாக வழங்கிய நிதி நிறுவன முகாமையாளர் நீதிமன்றக் காவலில்

யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றால் தனிநபர் ஒருவருக்கு சுமார் 10 கோடி ரூபா பணம் நகை அடகுக் கணக்கில் காட்டி நகை பெறப்படாமல் வழங்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனத்தின் முகாமைத்துவம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பெரும் நிதி மோசடிகள் பொலிஸ் விசாரணைப் பிரிவால், அந்த நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகரில் நீண்டகாலமாக இயங்கி வரும் நிதி நிறுவனம் ஒன்றால், மாதகலைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சுமார் 10 கோடி ரூபா பணம் மீற்றர் வட்டிக் கணக்கில் …

Read More »

அட்சய திருதியை நாளை: வாடிக்கையாளர்களைக் கவர புதிய டிசைன்களில் நகைகள்

அட்சய திருதியை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய டிசைனில் நகைகளைத் தயாரிப்பதில் நகை வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால், குடும்பத்தில் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த ஆண்டில் அட்சய திருதியை நாளை செவ்வாய்க்கிழமையாகும். இதை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சிறப்புச் சலுகைகளை நகைக் கடைகள் அறிவித்துள்ளன. இதேபோல் பெண்கள், ஆண்கள், குழந்தைகளுக்கென ஆயிரக்கணக்கில் புதிய டிசைனில் நகைகள் தயாரித்தும் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக யாழ்ப்பாணத்தில் நான்கு தசாப்தங்களாக தங்க நகை வியாபாரத்தில் …

Read More »

அட்சய திருதியை செவ்வாயன்று – பலன்கள் என்ன?

நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி “அட்சய திருதியை” எனப் போற்றப்படுகிறது. ‘அட்சயம்’ என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பல நல்ல பலனை தரக்கூடியது. இந்த வருடம் அட்சய திருதியை சித்திரை மாதம் 24ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (07-05-2019) அன்று வருகிறது. இந்நாளில் வாங்கப்படும் …

Read More »

அட்சய திரிதியையில் தங்கம் வாங்குவது ஏன்?

‘அட்சய’ என்பதற்கு அழியாது பெருகக்கூடியது என்பது பொருளாகும். சித்திரை மாதம் அமாவாசையை அடுத்து வரும் திரிதியை நாளை ‘அட்சய திரிதியை’ நாளாக கொண்டாடுகிறோம். மனிதர்களின் அறநெறிகளில் ஒன்று தானம். அட்சய திரிதியை நாளில் தான தர்மம் செய்பவர்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். நம்மால் முடிந்த சிறிதளவு தர்மம் செய்தாலும் அதற்கான பலன் பலமடங்காகும். செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் பெருக இந்நாளில் தானம் செய்வது விசேஷம் என்பது நம்பிக்கை. குறிப்பாக அன்னதானம், சொர்ண தானம், வஸ்திர தானம் செய்வது மிகவும் விசேஷம். தங்கத்தை தானமாகத் …

Read More »

மகேல – சங்காவின் ரெஸ்டோரன்ட் ஆசியாவில் 35ஆவது இடத்தைப் பிடித்தது

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் மகேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார இருவரும் இணைந்து நடத்தும் மினிஸ்ரி ஒப் கிராப் (Ministry of Crab) ரெஸ்ரோடன்ட் ஆசியாவில் 35ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசியாவின் சிறந்த 50 ரெஸ்ரோடன்ட்கள் தரப்படுத்தலில் 35ஆவது இடத்தை கொழும்பில் இயங்கும் மினிஸ்ரி ஒப் கிராப் பிடித்துள்ளது. இந்த ரெஸ்ரோடன்டை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜான்பவான்கள் மகேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார இருவரும் இணைந்து நடத்தி வருகின்றனர். மக்காவுவில் இன்று இரவு நடைபெற்ற விழாவில் 35ஆவது இடத்தைப் பிடித்த மினிஸ்ரி …

Read More »

வாகன இறக்குமதிக்கு மார்ச் 6ஆம் திகதிக்கு முன் வங்கி உறுதிப் பத்திரம் வழங்கியோருக்கு புதிய வரி கிடையாது – நிதி அமைச்சு

2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வாகன இறக்குமதித் தீர்வை அதிகரிப்பு மார்ச் மாதம் 6 ஆம் திகதிக்குப் பின்னர் வங்கி உத்தரவாதப் பத்திரம் வழங்கப்பட்ட வாகனங்களுக்கே நடைமுறைப்படுத்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்மூலம் மார்ச் 5ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வங்கி உத்தரவாதப் பத்திரத்தை வழங்கி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு புதிய இறக்குமதித் தீர்வை அறவிப்படமாட்டாது என நிதி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாடாளுமன்றில் கடந்த 5ஆம் …

Read More »

கார்களின் விலை எகிறுகிறது – பட்ஜெட்டில் வரி அதிகரிகப்பால் மாற்றம்

2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட வாகன இறக்குமதி மீதான வரி உயர்வால் வகூன் ஆர் (wagon R) கார் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாலும் அல்ரோ (Alto) ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாலும் அக்ஸிகோ மற்றும் அக்குவா (Axico and Aqua) 6 லட்சம் ரூபாவலும் பிறிமுயோ மற்றும் சிஎச்ஆர் (primio and CHR) 7 லட்சம் ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர். பஅதிசொகுசு வாகனங்களுக்கான வரி அதிகரிப்பு நாளை புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக …

Read More »

தங்கத்தின் விலை இன்று திடீர் ஏற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை மீளவும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இன்று அதன் விலை திடீரென 400 ரூபாவால் அதிகரித்தது. கடந்த வாரம் 24 கரட் தங்கத்தின் விலை 64 ஆயிரத்து 800 ரூபாவாகக் காணப்பட்டது. அதன் விலை இன்று முற்பகல் 64 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. எனினும் நண்பகல் அதன் விலை 64 ஆயிரத்து 200 ரூபாவாக அதிகரித்தது. இன்று திங்கட்கிழமை (18) தூய தங்கத்தின் விலை 64 ஆயிரத்து 200 ரூபாவாக  அதிகரித்துள்ளது. உலக சந்தையில் கடந்த வாரம் தங்கத்துக்கு ஏற்பட்ட விலை அதிரிப்பே …

Read More »

ஏ.ரி.எம் அட்டைகள் ஊடான பணப்பரிமாற்றலில் அவதானம் தேவை – மோசடிகளையடுத்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

அரச மற்றும் தனியார் வங்கிகளில் தன்னியக்க பணப்பரிமாற்றல் இயந்திரம் (ஏ.ரி.எம் ) ஊடாக முன்னெடுக்கப்பட்ட நிதி மோசடி தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கையிலுள்ள வங்கிகளில் காணப்பட்டும் தன்னியக்க பணப்பரிமாற்றல் இயந்திரங்களில் ஹக் செய்யும் வசதியைக் கொண்ட கருவியொன்றைப் பொருத்தி அதனூடாக வாடிக்கையாளர்களின் தரவுகள் மோசடிக் கும்பல் ஒன்றால் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த தரவுகளைப் பயன்படுத்தி போலியான அட்டைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து பணம் பெறப்படுவதாக பொலிஸில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. பல கோடி ரூபா மோசடி இடம்பெற்றதால் விசாரணை நடத்தும் பணி குற்றத்தடுப்புத் திணைக்களத்தினர் …

Read More »

வலி. மேற்கு பிரதேச தடகளப் போட்டிகள்

வலி. மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டி நேற்றுமுன்தினம் சனிக்கிழமை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்னல் மைதானத்தில் இடம்பெற்றது. இந்தத் தடகளப் போட்டில் பல நூற்றுக் கணக்கான வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் வெற்றிபெற்றவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட மட்ட தடகளப் போட்டிகளுக்கு தெரிவாகினர்.

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!