வணிகம்

என்டர்பிரைஸ் சிறிலங்கா செயற்றிட்டம் பற்றி பயனாளிகளுக்கு விழிப்பூட்டல் – ஹற்றன் நஷனல் வங்கி முன்னெடுப்பு

தொழில் முனைவோரை உருவாக்கும் நிதி அமைச்சின் பெரும் செயற்திட்டமான ‘என்டர்பிரைஸ் சிறிலங்கா’ திட்டம் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தமர்வு யாழ்ப்பாணத்தில் நேற்றுச் செய்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வடபிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஹற்றன் நஷனல் வங்கியின் வடபிராந்திய அலுவலகம் நடத்திய இந்தக் கருத்தமர்வில் 75 பயனாளிகள் கலந்துகொண்டு நிதிசார் ஆலோசனைகளைப் பெற்றனர். யாழ்ப்பாணம் மின்சார வீதியில் அமைந்துள்ள ஹற்றன் நஷனல் வங்கியின் தலைமையகக் கிளை மண்டபத்தில் நேற்றுமுற்பகல் இந்தக் கருத்தமர்வு நடைபெற்றது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வடபிராந்திய அலுவலகத்தால் தெரிவு செய்யப்பட்ட 75 பயனாளிகளுக்கு …

Read More »

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 172.34 ரூபாவாக வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 172 ரூபா 34 சதமாக மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (9) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட நாணயமாற்று வீதங்களுக்கமைய, வளைகுடா நாடுகளின் நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதிகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. பஹ்ரேன் தினார் 452 ரூபா 59 சதமாகவும் குவைத் தினார் 563 ரூபா 50 சதமாகவும் காணப்படுகின்றது. ஓமான் ரியால் 443 ரூபா 33 சதமாகவும் கட்டார் ரியால் 46 ரூபா 87 சதமாகவும் காணப்படுகின்றது.

Read More »

இலங்கை ரூபாவின் மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 171.42 ரூபாவைத் தொட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றில் விற்பனைப் பெறுமதி, 171.42 ரூபாவாகவும், கொள்வனவுப் பெறுமதி 167.55 ரூபாவாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு, முதல் முறையாக, 171 ரூபாவுக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.

Read More »

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் வாகனங்களின் விலை அதிகரிப்பு

ரூபாவின் பெறுமதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் வாகனங்களின் விலை 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா முதல் 8 இலட்சம் ரூபாவரை அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றில் விற்பனைப் பெறுமதி, 170.65 ரூபாவாகவும், கொள்வனவுப் பெறுமதி 166.78 ரூபாவாகவும் வரையறுக்கப்பட்டிருந்தது. இது நேற்று …

Read More »

ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாகச் சரிவு

தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வந்த, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு, இன்றும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 167 ரூபா 41 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 163 ரூபா 87 சதமாகவும் இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 167 ரூபாவாக வீழ்ச்சியடைந்தமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வந்த, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு, இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 166 ரூபா 64 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 163 ரூபா 10 சதமாகவும் இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுவருவதால், இறக்குமதிப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்புச் சரிவு

அமெரிக்க டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கிணங்க இன்று 17ஆம் திகதி திங்கட்கிழமை டொலரின் விற்பனை விலை 165 ரூபா 84 சதமாகக் காணப்படுகின்றது. அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 161 ரூபா 81 சதமாகக் காணப்படுகின்றது. இலங்கை வரலாற்றில் அதிக பட்சமாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 165 ரூபாவாக வீழ்ச்சியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் சரிந்தது

அமெரிக்க டொருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி, இரண்டு வாரங்களில் 0.85 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை 162.74 ரூபாவாக இருந்தது. கடந்த இரண்டு வாரங்களாகவே அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிந்து வந்தது. இது இன்று புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 14 நாள்களில், டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 1.56 ரூபாவினால் (0.85 வீதம்) வீழ்ச்சியடைந்தது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் டொலருக்கு எதிரான, இலங்கை ரூபாவின் …

Read More »

இலங்கை நாணயத்தாள்கள் சீனாவில் அச்சிடப்படுகின்றன

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் நாணயத் தாள்களை சீனாவே அச்சிடுவதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஏனைய நாடுகளின் பொருளாதாரங்களில் செல்வாக்கைக் கட்டியெழுப்பும் வகையில், பெருமளவான வெளிநாட்டு நாணயத்தாள்களை சீனா அச்சிடுகிறது. சீனாவில் உள்ள நாணயத் தாள் அச்சிடும் தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அண்மைக்காலம் வரை சீனா வெளிநாட்டு நாணயத்தாள்களை அச்சிடவில்லை என்று சீனாவின் வங்கி நாணயத் தாள்கள்  அச்சிடும் நிறுவனத்தின் தலைவரான லியூ கியூஷேங், தெரிவித்துள்ளார். அணை மற்றும் பாதை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், …

Read More »

சிறிய ரக வாகனங்களின் விலைகள் கிடுகிடு அதிகரிப்பு

ஆயிரத்துக்கும் குறைவான (1000சிசி) இயந்திரக் கொள்ளளவு கொண்ட வாகனங்களின் இறக்குமதி மீதான வரி அதிகரிக்கப்பட்டதையடுத்து அவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளன என்று வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதியாகும் ஆயிரத்துக்கும் குறைவான (1000சிசி) இயந்திரக் கொள்ளளவு கொண்ட கார்களின் இறக்குமதி மீதான வரி இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 1000 சிசிக்கு குறைவான ஹைபிறிட் வாகனங்களின் இறக்குமதி வரி 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1000 சிசிக்கு குறைவான வாகனங்களின் இறக்குமதி வரி 15 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 1000 சிசிக்கு …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!