விளையாட்டு

September, 2019

 • 20 September

  தனஞ்சயவுக்குத் தடை

  இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பந்துவீசுவதற்கு ஒரு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வளர்ந்து வருபவர் அகில தனஞ்சய. 25 வயதாகும் இவரது பந்துவீச்சு ஐசிசி விதிமுறைக்கு மாறாக இருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகார் எழும்பியது. பின்னர் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஐ.சி.சியிடம் இருந்து நற்சான்றிதழ் பெற்று தொடர்ந்து பந்துவீசினார். இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த …

 • 20 September

  ரொனால்டோ மிருகத்தனமானவர் – பாராட்டுகிறார் டைகோ

  களத்தில் ரொனால்டோ மிருகத் தனமானவர் என்று பாராட்டியுள்ளார் ஸ்பெய்னைச் சேர்ந்த அத்லெட்ரிகோ மட்ரிட்டின் பயிற்சியாளர் டைகோ. 2019-2020 பருவகாலத்துக்கான சம்பியன்ஸ் லீக் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அத்லெட்ரிகோ மட்ரிட் தனது முதலாவது ஆட்டத்தில் இத்தாலியக் கழகமான யுவென்டாஸை எதிர்கொள்கிறது. இதையடுத்தே யுவென்டாஸின் வீரரான ரொனால்டோவைப்பற்றி இவ்வாறு தெரிவித்துள்ளார் டைகோ. ரொனால்டோவால் யுவென்டாஸால் பலமாகச் செயற்பட முடிகிறது என்றும் டைகோ தெரிவித்தார்.

 • 18 September

  தென்னாபிரிக்காவை வென்றது இந்தியா

  தென்னாபிரிக்க – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று தென்னாபிரிக்காவை துடுப்பெடுத்தாடப் பணித்தது இந்திய அணி. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் குயின்டன் அதிகபட்சமாக 52 ஓட்டங்களையும், பவுமா 49 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணியின் சார்பில் பந்துவீச்சில் சாகர் …

 • 17 September

  பாகிஸ்தான் வீரர்களுக்கு பிரியாணி ‘கட்’

  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி உணவாக கிடையாது என புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள மிஷ்பா உல் ஹக் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மற்றும் தேர்வாளராக மிஷ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் உணவுமுறையில் கட்டுப்பாடு விதித்துள்ளார். இங்கிலாந்தில் உலக கோப்பை நடந்தபோது, பாகிஸ்தான் வீரர்களின் உடல்தகுதி குறித்து பிரச்சினை எழுந்தது. இதன் காரணமாகவே இந்த நடைமுறை வந்துள்ளது.

 • 16 September

  இளங்கதிர் வெற்றி

  உதயசூரியன் கழகம் நடத்தும் துடுப்பாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் வல்வை இளங்கதிர் வென்றது. றெயின்போ மைதானத்தில் போட்டி இடம்பெற்றது. யுனைற்ரெட் அணியை எதிர்த்து இளங்கதிர் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடத் இளங்கதிர் 6 பந்துப்பரிமாற்றங்களில் 6 இலக்குள் இழப்புக்கு 52 ஓட்டங்களைப் பெற்றது. யுனைற்ரெட் அணி 28 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.

 • 16 September

  வடதாரகை – யுனிபைட் ஆட்டம் சமநிலை

  யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட துடுப்பாட்டத் தொடரின் இறுதிப்போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. வடதாரகை மற்றும் யுனிபைட் அணிகள் மோதவிருந்த இன்றைய இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து கிண்ணம் பகிர்ந்தளிக்கப்பட்டது

 • 16 September

  இறுதியில் ஓல்ட் கோல்ட்ஸ்

  ஏபி பவுண்டேசன் நடத்தும் கடினப்பந்து துடுப்பாட்டத் தொடரில் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஓல்ட் கோல்ட்ஸ் அணி 20 பந்துப் பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. சிறிகுகன் அரைச்சதம் கண்டார். பதிலளித்து விளையாடிய சென்றலைட்ஸ் 9 இலக்குகளை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.

 • 15 September

  ஆட்டம் கைவிடப்பட்டது

  இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ருவென்ரி ருவென்ரி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.

 • 15 September

  துடுப்பாட்ட சங்கத்துக்கு அலுவலகம்

  கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்துக்கு அலுவலகக் கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச் சங்கத் தலைவர் அ.அலோசியஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்து கொண்டார்.

 • 15 September

  ரோகித் வெற்றிபெற்றால் இந்தியா அச்சுறுத்தும்

  டெஸ்ட் ஆட்டங்களில் ரோகித் வெற்றிபெற்றால் இந்திய அணி எந்த இலக்கையும் விரட்டக்கூடிய பலமான அணியாகத் திகழும் என்று இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்தார். இது தொடர்பில் சஞ்சய் மேலும் தெரிவித்ததாவது: டெஸ்ட் அணியில் நிலைப்பெற்ற நடுவரிசை வீரர்கள் இருப்பதால் ரோகித் சர்மாவை மத்திய வரிசையில் நுழைக்க முடியாது. எனவே தொடக்க வீரராக இறங்குவது அவருக்கு புதிய சவால். ஆனால் ஒரு சாதக நிலை என்னவெனில் சிவப்புப் பந்தில் தொடக்க வீரராக இறங்கும்போது களத்தில் நிறைய இடைவெளி இருக்கும். மேலும் மத்திய …

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!