விளையாட்டு

April, 2019

 • 18 April

  தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு

  சிறிலங்கா கிரிக்கெட், உலகக் கோப்பைக்கான தனது அணியை இன்று அறிவித்துள்ள நிலையில் தென்னாபிரிக்காவும் பாகிஸ்தானும்  தமது அணிகளை அறிவித்துள்ளன. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமீர் அணியில் இடம்பெறவில்லை. ஆனால் உலகக் கிண்ணத் தொடருக்கு முந்தைய இங்கிலாந்து தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். சர்பிராஸ் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியில் முகமது ஹபீஸ், ஜுனைத் கான், சோயிப் மலிக் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஹசன் அலி, பகர் ஜமான், பாபர் அசாம், ஜமாத் வாசிம், ஷதாப் கான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். முகமது …

 • 18 April

  உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: டிக்வெல, தரங்க, சந்திமல் நீக்கம்

  உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி வீர்ர்களான தினேஷ் சந்திமல், நிரோஷன் டிக்வெல, தனுஷ்க குணதிலக, உபுல் தரங்க ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் – 2019 எதிர்வரும் மே 30 முதல் ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன நேற்று நியமிக்கப்படார். அவரது முதலாவது உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இதுவாகும். இந்த நிலையில் இலங்கை அணி …

 • 17 April

  உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணித் தலைவர் திமுத்

  உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவாகியுள்ளார். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் – 2019 எதிர்வரும் மே 30 முதல் ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணியின் தலைவர் நியமனம் தொடர்பில் சிறிலங்கா கிரிக்கெட்டின் தேர்வுக்குழு இன்று கூடி ஆராய்ந்த்து. அதனையடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேவேளை, திமுத் கருணாரத்னவின் முதலாவது உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 • 15 April

  உலகக் கிண்ணம் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு

  ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் – 2019 எதிர்வரும் மே 30 முதல் ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. உலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் இன்று அறிவித்தது பிசிசிஐ. இதில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி: விராட் கோலி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா (துணைத் தலைவர்) ஷிகர் தவான், கெதர் ஜாதவ், எம்எஸ் …

 • 11 April

  வென்றது சென். பற்றிக்ஸ் கல்லூரி

  யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சுற்றுக் கிண்ணத்துக்கான ஆட்டத்தில் 187 ஓட்டங்களால் வென்றது சென். பற்றிக்ஸ். யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று இந்த ஆட்டம் இடம்பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டிலக்சன் 96 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் டிகாஸ் 4 இலக்குகளையும், சிந்துயன் 3 இலக்குகளையும், கேசவன் …

 • 8 April

  அரியாலை மாட்டு வண்டிச் சவாரி சிறப்பு

  அரியாலை சுதேசிய திருநாட்கொண்டாட்டத்தின் நுாற்றாண்டு விழாவின் ஒரு நிகழ்வாக மாட்டு வண்டி சவாரி போட்டி நடாத்தப்பட்டது. அரியாலை திறந்த வெளி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தப் போட்டிகள் நடைபெற்றன.  படங்கள் – மயூரப்பிரியன்

 • 7 April

  பொன் அணிகள் சமரின் ஒருநாள் போட்டி வியாழனன்று கோலாகலம்

  யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க “பொன் அணிகள் போர்” கிரிக்கெட் சமரின் ஒரு அங்கமான ராஜன் – கதிர்காமர் வெற்றிக்க ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் வியாழக்கிழமை (11) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் 4 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் ராஜன் – கதிகாமர் வெற்றிக்கிண்ணத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 …

 • 2 April

  திமுத் கருணாரத்னவுக்கு 1.3 மில்லியன் ரூபா தண்டம் – சிறிலங்கா கிரிக்கெட் விதிப்பு

  வீரர்களின் நடத்தை விதிமுறைகளை மீறி மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்துக்கு இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவை 7 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் ( சுமார் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபா) தண்டம் செலுத்துமாறு சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பயணித்த கார், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை    பொரளை கிங்ஸி வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றை  மோதியதில் விபத்து இடம்பெற்றது. விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் …

 • 1 April

  திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்

  சிறிலங்கா கிரிக்கெட்டின் டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவின் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட கொழும்பு போக்குவரத்து நீதிமன்ற நீதிவான், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த கட்டளையிட்டார். கொழும்பு பொரளையில் நேற்று அதிகாலையில் காரில் பயணித்த திமுத் கருணாரத்ன, முச்சக்கர வண்டி ஒன்றை மோதி விபத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அத்துடன் விபத்தை ஏற்படுத்திய போது அவர் மதுபோதையில் இருந்தார் என்ற குற்றச்சாட்டையும் பொலிஸார் முன்வைத்தனர். பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட திமுத் கருணாரத்ன, இன்று கொழும்பு போக்குவரத்து நீதிமன்ற நீதிவான் சாளிய சன்ன அபயவர்த்த …

March, 2019

 • 31 March

  கருகம்பனை மாட்டு வண்டிச் சவாரி; சீறிப் பாய்ந்த காளைகள்

  சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம் , இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டு கழகம்  ஆகியன இணைந்து மாபெரும் மாட்டு வண்டி சவாரி போட்டியினை நடாத்தி இருந்தனர். யாழ். கருகம்பனை சீராவலை சவாரித்திடலில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த சவாரி போட்டிகள் நடைபெற்றன.  படங்கள் – ஐ.சிவசாந்தன்  , மயூரபிரியன்

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!