சிவப்பிரியை இராஜரட்ணம்

  0
  614
  மரண அறிவித்தல்
  திருமதி சிவப்பிரியை இராஜரட்ணம்
  ஆசிரியை
  வயது 68
  கனடா , அனலைதீவு 6ஆம் வட்டாரம் (பிறந்த இடம்)

  அனலைதீவு 6 ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும், Mississauga – Canada வை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி சிவப்பிரியை இராஜரட்ணம் அவர்கள் 16.05.2023 செவ்வாய்க்கிழமை மாலையில் சிவபதம் அடைந்தார்.

  அன்னார் அமரர்கள் சீவரத்தினம் தையல்நாயகி தம்பதியரின் அன்பு மகளும்,
  திரு.இராஜரட்ணம் (கனடா ) அவர்களின் அன்பு மனைவியும், திரு ராஜ்காந்தன் (கனடா ) ராஜினி (கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,

  திருமதி பவானி மகாலிங்கம் (கனடா), திருமதி மனோன்மணி அமரசிங்கம்(ஜேர்மனி), திருமதி ஜானகி உருத்திரபரமேஸ்வரன்(இலங்கை), திரு சீவரத்தினம் சுப்பிரமணியசிவம் (ஜேர்மனி), திருமதி ஜீவநாயகி தனபாலசிங்கம்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

  அனலைதீவு மத்தி நாவலர் முன்பள்ளியின் ஆரம்ப ஆசிரியருள் ஒருவரான திருமதி சிவப்பிரியை இராஜரட்ணம் அவர்களின் விரிவான மரண அறிவித்தல் மற்றும் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்.

  இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பழைய மாணவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  தகவல் : குடும்பத்தினர்