தம்பிப்பிள்ளை சிங்கஅரியரட்ணம்

  மரண அறிவித்தல்
  வைத்திய கலாநிதி தம்பிப்பிள்ளை சிங்கஅரியரட்ணம்
  பாரம்பரிய சித்த வைத்தியர்
  வயது 68
  வட்டுக்கோட்டை , தெல்லிப்பழை (பிறந்த இடம்)

  யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிங்கஅரியரட்ணம் 24.01.2021 இன்று ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

  அன்னார் காலஞ்சென்ற வைத்தியகலாநிதி தம்பிப்பிள்ளை, செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகனும் தியாகராசா, மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்

  சற்குணதேவி (ஓய்வுபெற்ற குடும்பலநல உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும் புருஷோத் (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம், காரைநகர்), கிரிஷாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

  கிருஷ்ணவேணி (ஓய்வுநிலை பேராசிரியர் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்), மோகனராணி (ஓய்வுநிலை ஆசிரியர்), லோகேஸ்வரி (ஜேர்மனி), சிவமோகன் ( ஓய்வுபெற்ற வைத்தியசாலை பரிசாரகர் – சங்கானை), ஜெயமோகன் (ஜேர்மனி), சாந்தமலர் (கொழும்பு), யோகேந்திரன் (வலம்புரி அழகுமாடம் – வட்டுக்கோட்டை), சுஜனி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்

  செல்வமலர் (பண்ணாகம்), பாலச்சந்திரமூர்த்தி (பண்ணாகம்), அருணகிரிநாதன் (நோர்வே), சிவயோகநாதன் (பண்ணாகம்), பரந்தாமன் (பண்ணாகம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

  அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (25.01.2021) திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்று அன்னரது பூதவுடல் தகனக் கிரியைக்காக வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

  இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

  தகவல் : குடும்பத்தினர், 0778065495, வட்டுத் தெற்கு, வட்டுக்கோட்டை