உடனடிச் செய்திகள்

ஆஸியிடம் போராடித் தோல்வியடைந்தது பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் வோர்னர் சதம் விளாசி கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னெறியது. முஸ்பிகீர் ரகீம் சதமடித்தும் பங்களாதேஷ் அணி இறுதிவரை போராடி ஏமாற்றமடைந்தது. இங்கிலாந்து மண்ணில் ஐ.சி.சி., உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நாட்டிங்காமில் இன்று நடந்த 26ஆவது லீக் போட்டியில் ‘நடப்பு சம்பியன்’ ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் ஷோன் …

Read More »

இலங்கைத் தமிழர்கள் 65 பேர் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

இலங்கையைச் சேர்ந்த ஒப்பந்தத் தோட்டத் தொழிலாளர்கள் வம்சாவளியைச் சேர்ந்த 65 தமிழர்கள் இந்தியக் குடியுரிமை கேட்டு செய்திருந்த மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உடனடியாகத் தாமதிக்காமல் மத்திய அரசுக்கு குடியுரிமை விண்ணப்பத்தை அனுப்பி வைக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார். மத்திய அரசு இதன் மீது 16 வாரங்களில் முறையான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். அதாவது மனுதாரர்கள் இருக்கும் ஒரு தனிப்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு …

Read More »

நியூசிலாந்து திரில் வெற்றி – அரையிறுதி வாய்ப்பை இழக்கிறது தென்னாபிரிக்கா

உலகக் கிண்ண லீக் போட்டியில் அணித்தலைவர் வில்லியம்சன் சதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. துடுப்பாட்டம், பந்துவீச்சில் ஏமாற்றிய தென்னாபிரிக்க அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நேற்று நடந்த லீக் போட்டியில் தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. மழையால் போட்டி ஆரம்பமாவதில் தாமதமானது. பின், தலா 49 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. தென்னாபிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!