உடனடிச் செய்திகள்

சங்கக்காரவுக்கு மிகப்பெரும் கௌரவம் – எம்சிசியின் அடுத்த தலைவராக அறிவிப்பு

இங்கிலாந்து மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி ஒரு வருடத்துக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின் தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறையாகும். அந்தப் பொருமை குமார் சங்கக்காரவுக்குக் கிடைத்துள்ளது. மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று மே முதலாம் திகதி லோட்ஸில் நடைபெற்றது. இதன்போது தற்போதைய தலைவர் அந்தோனி …

Read More »

ரூபா 2 கோடி பெறுமதியான அபின் வடமராட்சியில் மீட்பு – யாழ்.குடாநாட்டில் அதிகளவு இதுவே

யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதன்முறை அதிகளவு அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஒன்றைரைக் கிலோ அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. “வடமராட்சி தொண்டமனாறு – கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான இருவர் நடமாடினர். அவர்கள் பொலிஸார் வருவதைக் கண்டதும் பொதி ஒன்றை போட்டுவிட்டு தப்பி ஓட்டம் எடுத்தனர். அந்தப் பொதியைச் சோதனையிட்ட போது சுமார் ஒன்றரைக் கிலோ அபின் போதைப்பொருள் காணப்பட்டது. அந்த போதைப்பொருள் பொதி வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது” என்று பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட …

Read More »

அட்சய திருதியை அடுத்த வாரம் – தங்கம் வாங்க நீங்கள் தயாரா?

அட்சய திருதியை நாள் வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமையாகும். அன்றைய நாளில் தங்கம் வாங்கினால், பொன் பெருகும் என்பது ஐதிகம். யாழ்ப்பாணத்தில் அட்சய திருதியை தங்கத் திருநாள் விழா ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய நாளில் நகை வியாபார நிலையங்கள் அனைத்தும் விழாக்கோலம் பூணும். தமது வசதிக்கு ஏற்ப மக்கள் தமக்குப் பிடித்தமான நகைகளைக் கொள்வனவு செய்வர். அவர்களுக்கு மகிழ்வூட்ட நகைக் கடைகளால் பெறுமதிமிக்க அன்பளிப்புகளும் வழங்கப்படும். குபேரன் தான் இழந்த நிதிகளைத் திரும்பப்பெற்ற தினம் இந்த அட்சயத் திருதியை என்று புராணங்கள் கூறுகின்றன. …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!