உடனடிச் செய்திகள்

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல்; கோவையில் மேலும் நால்வர் கைது

இலங்கையில் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்கதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி கோவையில் மேலும் மூவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர பொலிஸ் நுண்ணறிவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தேசிய புலனாய்வு நிறுவனத்தால் வேறு ஒரு நபரும் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர பொலிஸ் நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வந்த முகமது உசைன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய மூன்று சந்தேகநபர்களை நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ …

Read More »

மேற்கிந்தியத் தீவுகள் அணியை வென்றது இங்கிலாந்து

உலகக் கிண்ண லீக் போட்டியில் அசத்திய இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பெயருக்கு ஏற்ப அபாரமாக ஆடிய ரூட் (ஆணிவேராக) சதம் விளாசி வெற்றிக்கு கைகொடுத்தார். இங்கிலாந்து மண்ணில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ‘வேகங்கள்’ தொல்லை தந்தனர். முதல் ஓவரை வோக்ஸ் ‘மெய்டனாக’ வீசினார். அடுத்த …

Read More »

பெண்கள் மென்பந்து கிரிக்கட் போட்டி – வடமாகாண சம்பியனானது அனலைதீவு சதாசிவ ம.வி

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பெண்களுக்கான மென்பந்து கிரிக்கட் போட்டியில் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய அணி வெற்றிபெற்று சம்பியனானது. கிளிநொச்சி சென்.திரேசா மகளிர் கல்லூரியில் நேற்று (12) புதன்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் புத்தூர் சோமஸ்கந்தா அணியை எதிர்கொண்டு விளையாடிய அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய மகளிர் அணியினர் போட்டியில் வெற்றிபெற்று வடமாகாண சம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இது குறித்து கருத்து வெளியிட்ட அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய அதிபர் நா.இராதாகிருஷ்ணன, “இப்போட்டியில் வெற்றிபெற்று வடமாகாண சாம்பியன் ஆகிய நாங்கள், தேசிய ரீதியிலும் வெற்றிபெறுவோம். அதற்கான …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!