உடனடிச் செய்திகள்

சரித்திரப் படத்தில் மீண்டும் ராணா

பாகுபலியைப் போன்று சரித்திரப் படமாக உருவாகவிருக்கும் மார்த்தாண்டவர்மா படத்தின் நாயகனாக ராணா நடிக்கவிருக்கிறார். எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலியின் இரண்டு பாகங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் வில்லனாக நடித்த ராணா டகுபதி பல தரப்பினராலும் பாராட்டைப் பெற்றார். தற்போது பிரபல இயக்குநர் கே.மது இயக்கத்தில் மார்த்தாண்ட வர்மா ‘தி கிங் ஆப் திருவாங்கூர்’ என்ற புராணக்கதையில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதனையொட்டி அவர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்பு கவடியாறு அரண்மனைக்குச் சென்று …

Read More »

விக்னேஷ் சிவன் ட்விட்டர் சர்ச்சை

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் தொடர்பாக ட்விட்டரில் ஒருவர் முன்வைத்த விமர்சனத்துக்கு, விக்னேஷ் சிவன் பதிலளித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கல் தினக் கொண்டாட்டமாக வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. கௌசிக் எல்எம் (@LMK Movie maniac) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனவரி மாதம் வெளியான படங்கள் எதுவுமே லாபகரமாக இல்லை. பிப்ரவரி மாதமாவது நல்லபடியாக இருக்கும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். …

Read More »

விக்ரம் பிரபு: குவியும் படங்கள்

தன்னுடைய படங்கள் பெரிதாக வெற்றி பெறாதபோதும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக இருக்கிறார் விக்ரம் பிரபு. விக்ரம் பிரபு-நிக்கி கல்ராணி ஜோடி நடித்திருக்கும் ‘பக்கா’ திரைப்படம் முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. பக்கா படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘துப்பாகி முனை’ படப்பிடிப்பில் பிஸியானார். இந்த இரண்டு படங்களைத் தவிர்த்து மற்றொரு படத்திற்குத் தயாராகியிருக்கிறார் விக்ரம் பிரபு. ‘அசுரகுரு’ என்ற பெயரில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை தமிழக அரசின் விருது பெற்ற ‘அஞ்சனவித்தை’ குறும்படத்தின் …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!