உடனடிச் செய்திகள்

4ஆவது லீக் போட்டியும் மழையால் கைவிடப்பட்டது – இந்திய, நியூ. அணிகளுக்கு தலா ஒரு புள்ளி

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கிண்ண லீக் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்தப் போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டதால், ரவுண்ட் ரோபின் சுற்றில் இதுவரையான 18 லீக் போட்டிகளில் 4 போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் 12வது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. ‘ரவுண்ட் ரோபின்’ முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளன. இன்று நாட்டிங்காமில் …

Read More »

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா

உலகக் கிண்ண லீக் போட்டியில் டேவிட் வோர்னர் சதம் கடந்து கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் போராட்டம் வீணானது. இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டான்டனில் நேற்று நடந்த 17ஆவது லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் நீக்கப்பட்டு ஷஹீன் அப்ரிடி சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பாவுக்கு பதிலாக கேன் ரிச்சர்ட்சன், ஷோன் மார்ஷ் தேர்வாகினர். …

Read More »

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய அறுவர் கோவையில் சிக்கினர் – இந்திய புலனாய்வுப் பிரிவு தகவல்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்தியா, கோவையைச் சேர்ந்த 6 பேருக்கு எதிராக அந்த நாட்டு தேசிய புலனாய்வுப் பிரிவால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என …

Read More »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!