QR குறியீட்டு திட்டத்தில் முன்னேற்றம்; 4.2 மில்லியன் பேர் பதிவு- 481 செட்களில் விநியோகம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் (கியூஆர் குறியீடு) பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அமைப்பில் கிட்டத்தட்ட 50 சதவீத எரிபொருள் நிலையங்கள் ஏரிபொருள் நிலையங்களை ஆரம்பித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இரவு 8.30 மணிக்குள் 42 லட்சத்து 50 ஆயிரம் பேர் கியூஆர் குறியீட்டை பதிவு செய்துள்ளனர் என்று காஞ்சன விஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

மொத்தம் 481 எரிபொருள் நிலையங்கள் தேசிய எரிபொருள் அனுமதியை ஏற்றுக்கொண்டுள்ளன.

409 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களும் 72 லங்கா ஐஓசி எரிபோருள் நிரப்பு நிலையங்களும் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 208 பயனர்கள் பகலில் எரிபொருள் QR குறியீட்டை பயன்படுத்தி எரிபொருளைப் பெற்றுள்ளனர் என்றும் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.